Connect with us

Cricket

நான் தான் 360! சூர்யாவை மிஞ்சும் அளவுக்கு என்கிட்ட திறமை இருக்கு…அதிர வைத்த இளம் வீரர்.!

Published

on

இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் சூர்யகுமார் யாதவ் ஐபிஎல் போட்டிகளிலும் டி20 போட்டிகளிலும் சிறந்த பேட்ஸ்மேனாக சிறந்து விளங்குகிறார். நடைபாண்டு ஐபிஎல் தொடரில் கூட அட்டகாசமாக விளையாடி அனைவரையும் வியக்க  வைத்து இருந்தார். அவருடைய அனைத்து ஷாட்களும்  பார்ப்பதற்கு மிகவும் அருமையாக இருப்பதால் அவரை 360 டிகிரி என ரசிகர்கள் செல்லமாக அழைத்து வந்தனர்.

குறிப்பாக, அவருடைய ஆட்டத்தை பார்த்து கிரிக்கெட் கடவுள் சச்சின் பிரமித்து போனார். இந்த நிலையில், பாகிஸ்தான் அணியில்  இளம் கிரிக்கெட் வீரர் முகமது ஹரீஷ் சமீபத்திய பேட்டி ஒன்றில் தான் சூர்யகுமா யாதவை  மிஞ்சும் அளவிற்கு திறன் கொண்டவன் என வெளிப்படையாக பேசி உள்ளார். இது குறித்து பேசிய முகமது ” நான் சூர்யகுமார் அவர்களுடன் என்னை ஒப்பிட்டு பேச விரும்பவில்லை.

அப்படியும் யாரும் பேசவும் வேண்டாம். ஆனால் நான் அவரை விட அதிகமான அளவிற்கு திறன் உள்ளவன். எனவே நான் 360 டிகிரி பெயரை எடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் விளையாடுகிறேன் அந்தப் பெயர் எனக்கு கிடைத்தே ஆக வேண்டும். நான் இப்போதுதான் ஆட்டத்தை ஆரம்பித்து உள்ளேன் எனவே 360 பெயர் எடுக்க இன்னும் கடினமாக உழைக்க வேண்டும் கண்டிப்பாக உழைத்து 360 பெயரை எடுப்பேன்.

சூர்யகுமார்  யாதவ் மற்றும் ஏபி டி வில்லியர்ஸ் ஆகியோர் அவர்களுக்கு என்று தனி தனி ஷாட்களை வைத்து  360 டிகிரிகள் பந்துகளை விளாசுகிறார்கள். அதேபோல நானும் கடின உழைப்பு செய்து எனக்கென்று ஒரு பெயரை  உருவாக்கி எனக்கும் 360 என்ற பெயரை வர வைப்பேன் ” என மிகவும் உறுதியுடன்  கூறியுள்ளார்.

google news