இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் சூர்யகுமார் யாதவ் ஐபிஎல் போட்டிகளிலும் டி20 போட்டிகளிலும் சிறந்த பேட்ஸ்மேனாக சிறந்து விளங்குகிறார். நடைபாண்டு ஐபிஎல் தொடரில் கூட அட்டகாசமாக விளையாடி அனைவரையும் வியக்க வைத்து இருந்தார். அவருடைய அனைத்து ஷாட்களும் பார்ப்பதற்கு மிகவும் அருமையாக இருப்பதால் அவரை 360 டிகிரி என ரசிகர்கள் செல்லமாக அழைத்து வந்தனர்.
குறிப்பாக, அவருடைய ஆட்டத்தை பார்த்து கிரிக்கெட் கடவுள் சச்சின் பிரமித்து போனார். இந்த நிலையில், பாகிஸ்தான் அணியில் இளம் கிரிக்கெட் வீரர் முகமது ஹரீஷ் சமீபத்திய பேட்டி ஒன்றில் தான் சூர்யகுமா யாதவை மிஞ்சும் அளவிற்கு திறன் கொண்டவன் என வெளிப்படையாக பேசி உள்ளார். இது குறித்து பேசிய முகமது ” நான் சூர்யகுமார் அவர்களுடன் என்னை ஒப்பிட்டு பேச விரும்பவில்லை.
அப்படியும் யாரும் பேசவும் வேண்டாம். ஆனால் நான் அவரை விட அதிகமான அளவிற்கு திறன் உள்ளவன். எனவே நான் 360 டிகிரி பெயரை எடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் விளையாடுகிறேன் அந்தப் பெயர் எனக்கு கிடைத்தே ஆக வேண்டும். நான் இப்போதுதான் ஆட்டத்தை ஆரம்பித்து உள்ளேன் எனவே 360 பெயர் எடுக்க இன்னும் கடினமாக உழைக்க வேண்டும் கண்டிப்பாக உழைத்து 360 பெயரை எடுப்பேன்.
சூர்யகுமார் யாதவ் மற்றும் ஏபி டி வில்லியர்ஸ் ஆகியோர் அவர்களுக்கு என்று தனி தனி ஷாட்களை வைத்து 360 டிகிரிகள் பந்துகளை விளாசுகிறார்கள். அதேபோல நானும் கடின உழைப்பு செய்து எனக்கென்று ஒரு பெயரை உருவாக்கி எனக்கும் 360 என்ற பெயரை வர வைப்பேன் ” என மிகவும் உறுதியுடன் கூறியுள்ளார்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…