இந்திய அணிக்கெதிரான டி20 உலகக் கோப்பை போட்டியில் அமெரிக்க அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இருப்பினும் வலுவான இந்தியாவுக்கு எதிராக அந்த அணி வீரர்கள் விளையாடிய விதம் பரவலான பாராட்டைப் பெற்றிருக்கிறது.
இதில் முதலில் பேட் செய்த அமெரிக்கா 111 ரன்களை இலக்காக நிர்ணயிக்கவே, சேஸிங்கில் இந்திய அணி தொடக்கத்திலேயே விராட் கோலி, ரோஹித் ஷர்மா விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ரிஷப் பண்டும் வெளியேறவே, சூர்யகுமார் – ஷிவம் துபே ஜோடி இறுதி வரை களத்தில் நின்று வெற்றியை உறுதி செய்தது.
போட்டியின் 16-வது ஓவருக்கு முன்பாக திடீரென கள நடுவர்கள் இருவரும் கலந்து பேசினர். அதன்பின்னர், அமெரிக்க அணிக்கு பெனால்டியாக 5 ரன்களை இந்தியாவுக்கு வழங்குவதாக சைகை செய்தனர். இது அமெரிக்க அணியினருக்கு பின்னடைவாக அமைந்தது. கடைசி 5 ஓவர்களில் அதாவது 30 பந்துகளில் 35 ரன்கள் எடுக்க வேண்டும் என்கிற நிலை, 30 பந்துகளில் 30 ரன்கள் என்று மாறியது.
இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட இந்திய பேட்டர்கள் வெற்றியை நோக்கி துரித நடைபோட்டனர். அமெரிக்காவுக்கு பெனால்டியாக 5 ரன்கள் விதிக்கப்பட்டதன் பின்னணியில் சமீபத்தில் கொண்டுவரப்பட்ட ஐசிசி விதிமுறை உள்ளது. அந்த விதிப்படி ஒவ்வொரு ஓவர் முடிந்தவுடன் அடுத்த ஓவரை ஃபீல்டு செய்யும் அணி ஒரு நிமிடத்துக்குள் வீசத் தொடங்க வேண்டும்.
இந்த விதிமுறைக்கு இரண்டு முறை விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. மூன்றாவது முறையும் இதை கடைபிடிக்கத் தவறும்பட்சத்தில் ஃபீல்டிங் செய்யும் அணிக்கு பெனால்டியாக பேட் செய்யும் அணியின் கணக்கில் 5 ரன்கள் வரவு வைக்கப்படும். இந்த விதியே அமெரிக்காவுக்கு 5 ரன்கள் பெனால்டி விதிக்க அடிப்படையாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஐபிஎல்லில் அதிக பிராண்ட் வேல்யூ – முதலிடத்தில் இருக்கும் சிஎஸ்கேவின் மதிப்பு தெரியுமா?
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…