ஆஸ்திரேலிய அணிக்கெதிரான சூப்பர் 8 மேட்சில் 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இந்திய அணி, அரையிறுதிக்குத் தகுதிபெற்றது.
கிராஸ் ஐலெட் டேரன் சமி மைதானத்தில் நடந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா ஃபீல்டிங் தேர்வு செய்ய, இந்தியா பேட்டிங் களமிறங்கியது. விராட் கோலி டக் அவுட் ஆகி வெளியேறினாலும், மறுமுனையில் பழைய பன்னீர்செல்வமாய் ஃபார்முக்குத் திரும்பி அதிரடி காட்டினார் கேப்டன் ரோஹித் ஷர்மா. குறிப்பாக, மிட்செல் ஸ்டார்க் வீசிய ஒரே ஓவரில் 3 சிக்ஸர்கள் உள்பட 29 ரன்களை அடித்து மிரட்டினார் ஹிட்மேன்.
8.4 ஓவர்களிலேயே 100 ரன்களைக் கடந்தது இந்திய அணி. அதிரடி காட்டத் தொடங்கிய பண்ட் 15 ரன்களில் வெளியேறினார். மறுமுனையில் வானவேடிக்கை நிகழ்த்திய ரோஹித் ஷர்மா சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 41 பந்துகளில் 92 ரன்கள் அடித்து மிட்செல் ஸ்டார்க் ஓவரில் அவர் ஆட்டமிழந்தார்.
சூர்யகுமார் யாதவின் 31, ஷிவம் துபேவின் 28 மற்றும் இறுதியில் பாண்டியா அதிரடியாகக் குவித்த 27 ரன்கள் உதவியோடு இந்தியா 205 ரன்களைக் குவித்தது. ஆஸ்திரேலியா தரப்பில் ஸ்டார்க், ஸ்டாய்னிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இந்தத் தொடரில் ஆஸ்திரேலியா தரப்பில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கும் ஆடம் ஜாம்பா இந்த மேட்சில் ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை.
206 ரன்கள் இலக்கோடு களமிறங்கிய ஆஸ்திரேலியா முதல் ஓவரிலேயே வார்னர் விக்கெட்டை இழந்தாலும், டிராவிஸ் ஹெட் – கேப்டன் மிட்செல் மார்ஷ் ஜோடி இணைந்து இந்திய பந்துவீச்சை வெளுத்து வாங்கியது. பவர்பிளேவில் 65 ரன்களை அந்த அணி எடுத்திருந்தது. அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்த மிட்செல் மார்ஷை குல்தீப் ஓவரில் அட்டகாசமான கேட்ச் மூலம் அக்சர் படேல் வெளியேற்ற மேட்ச் இந்தியா பக்கம் திரும்பியது.
அடுத்துவந்த மேக்ஸ்வெல், ஸ்டாய்னிஸ், டிம் டேவிட் மற்றும் மேத்யூ வேட் ஆகியோர் ஜொலிக்கவில்லை. மறுமுனையில் அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த டிராவிஸ் ஹெட், 43 பந்துகளில் 76 ரன்கள் அடித்து பும்ரா ஓவரில் அவுட் ஆகவே ஆஸ்திரேலியாவின் நம்பிக்கை தகர்ந்தது. 20 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா 7 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இந்தியா, அரையிறுதிக்குத் தகுதிபெற்றது. கயானாவில் நடக்கும் அரையிறுதியில் இந்தியா இங்கிலாந்து அணியை எதிர்க்கொள்கிறது.
இதையும் படிங்க: உல்லாசமாக இருந்ததை பார்த்துவிட்ட மாமியார்!.. கள்ளக்காதலுடன் சேர்ந்து கொலை செய்த மருமகள்…
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…