2025 டி20 ஆசிய கோப்பை இந்தியாவில் நடக்குது – எப்போ தெரியுமா?

0
189

2025 ஆண்கள் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரை இந்தியா நடத்த இருக்கிறது. இதேபோன்று 2027 ஆம் ஆண்டு இந்த தொடரை வங்காளதேசம் நடத்த இருக்கிறது. வங்காளதேசத்தில் இந்த தொடர் 50 ஓவர்கள் கொண்ட வடிவில் நடைபெறும்.

2027 ஆண்டில் 50 ஓவர் உலகக் கோப்பை தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற இருப்பதை ஒட்டி, அதற்கு முன்னோட்டமாக அமையும் வகையில், 2027 ஆம் ஆண்டு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் 50 ஓவர்கள் கொண்ட தொடராக நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

முன்னதாக 2023 ஆண்கள் ஆசிய கோப்பை தொடரை பாகிஸ்தான் மற்றும் இலங்கை நாடுகள் இணைந்து நடத்தின. இந்த தொடரில் இந்திய அணி பாகிஸ்தானில் விளையாட இருந்த போட்டிகள், பிசிசிஐ வேண்டுகோளுக்கு இணங்கும் வகையில், இலங்கைக்கு மாற்றப்பட்டன. இந்த தொடரில் இந்திய அணி கோப்பையை வென்று அசத்தியது.

தற்போது அடுத்த ஆண்டு நடைபெறும் ஆசிய கோப்பை தொடரை இந்தியா நடத்த இருப்பதால், பாகிஸ்தான் இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு தொடரில் விளையாடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும், அடுத்த ஆண்டு துவக்கத்தில் நடைபெற உள்ள சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் பங்கேற்க இந்திய அணி பாகிஸ்தான் பயணம் மேற்கொள்வது பற்றி எந்த முடிவும் இதுவரை வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே 1990/91 ஆண்டு இந்தியா ஆசிய கோப்பை தொடரை நடத்தியது. இந்த தொடரின் இறுதிப் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதிலும் இந்திய அணி கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.

ஆசிய கோப்பையின் எதிர்கால தொடர்களில் மொத்தம் 13 போட்டிகள் இடம்பெறும். 2026 ஆம் ஆண்டு நடைபெறும் டி20 மகளிர் ஆசிய கோப்பை தொடரில் மொத்தம் 15 போட்டிகள் நடைபெற உள்ளன. எனினும், இவை எங்கு நடத்தப்படும் என்பது குறித்து எந்த முடிவும் எட்டப்படவில்லை.

ஆண்கள் அண்டர் 19 ஆசிய கோப்பை தொடர் 2024, 2025, 2026 மற்றும் 2027 ஆண்டுகளில் நடத்தப்பட உள்ளது. இவை அனைத்திலும் 15 போட்டிகள் நடக்கப்படும். இத்துடன் 2024 மற்றும் 2026 ஆண்டுகளில் டி20 வளர்ந்து வரும் எமர்ஜிங் டீம்ஸ் ஆசிய கோப்பை தொடர் நடைபெற உள்ளது. 2025 மற்றும் 2027 ஆண்டுகளில் இதே தொடரின் 50 ஓவர்கள் கொண்ட வடிவில் நடைபெற இருக்கிறது.

தற்போது ஆசிய கோப்பை தொடரை இந்தியா நடத்துவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், விரைவில் போட்டி அட்டவணை மற்றும் இதர விவரங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.

google news

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here