Connect with us

Cricket

ஒரே தோல்வி, இந்தியா மோசமான சாதனை

Published

on

இலங்கை சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20-ஐ தொடர்ந்து ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி சமனில் முடிந்தது.

இதைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றது. மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் கடைசி போட்டியை இந்திய அணி வென்றாலும் தொடர் இரு அணிகளும் 1-1 என்ற அடிப்படையில் சமனில் தான் முடியும். முடியாது.

ஒருவேளை இலங்கை அணி மூன்றாவது போட்டியில் வெற்றி பெற்றாலோ அல்லது முதல் போட்டியை போன்று சமனில் முடிந்தாலோ தொடரை 1-0 என்ற கணக்கில் வெல்ல முடியும்.

எதுவாயினும், இந்திய அணி இந்த தொடரை கைப்பற்றும் வாய்ப்பு கைமீறிவிட்டது. இதனால் கடந்த 27 ஆண்டுகளில் முதல் முறையாக இந்திய அணி இலங்கை அணிக்கு எதிரான தொடரை கைப்பற்ற முடியாத நிலை உருவாகி இருக்கிறது.

கடந்த 1997 ஆம் ஆண்டு முதல் இலங்கை மற்றும் இந்தியா அணிகள் மோதிய ஒருநாள் தொடர்களில் இந்திய அணி இதுவரை தொடர்ச்சியாக 11 முறை வெற்றி பெற்று அசத்தியுள்ளது. தற்போது இந்த வெற்றி பயணம் முடிவுக்கு வந்துள்ளது.

இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் தனது பயணத்தை தொடங்கியுள்ளார். இதில் இந்திய அணி விளையாடிய டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.

இலங்கை – இந்தியா அணிகள் மோதிய இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்து 240 ரன்களை குவித்தது. 241 ரன்களை துரத்திய இந்திய அணி 208 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் இலங்கை அணி 32 ரன்களில் வெற்றி பெற்றது.

google news