Connect with us

Cricket

INDvsBAN: முதல் டெஸ்டில் கம்பேக் கொடுக்கும் பண்ட், கோலி – இளம் வீரருக்கு வாய்ப்பு..

Published

on

இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இதில் முதல் போட்டி சென்னையில் உள்ள சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.

செப்டம்பர் 19 ஆம் தேதி துவங்கும் இந்த போட்டிக்கான இந்திய அணி வீரர்கள் பட்டியலை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ நேற்றிரவு அறிவித்தது. வங்கதேசம் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய கேப்டனாக ரோகித் சர்மா களமிறங்குகிறார்.

இவரைத் தொடர்ந்து விராட் கோலி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா என பலம்வாய்ந்த வீரர்கள் அணியில் இடம்பெற்றுள்ளனர். ரிஷப் பண்ட் நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்திய டெஸ்ட் அணியில் மீண்டும் இடம்பிடித்துள்ளார்.

முன்னதாக ரிஷப் பண்ட் கடந்த 2022 டிசம்பர் மாதம் வங்கதேசம் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி இருந்தார். இவரைத் தொட்ரந்து விக்கெட் கீப்பர்-பேட்டர் துருவ் ஜூரல் மற்றும் சர்பராஸ் கான் டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ளனர். இடதுகை வேகப்பந்து வீச்சாளரான யாஷ் தயால் இந்திய அணியில் அறிமுகமாகிறார்.

இதே போன்று ஆகாஷ் தீப் டெஸ்ட் அணியில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். உடல்நிலை சரியில்லாத காரணத்தால் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடாத முகமது சிராஜ் தற்போது உடல்நலம் தேறி வங்கதேசம் அணிக்கு எதிரான தொடரில் களமிறங்குகிறார்.

இந்திய அணி வீரர்கள் பட்டியல்:

ரோகித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், விராட் கோலி, கேஎல் ராகுல், சர்பராஸ் கான், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), ரவிசந்திரன் அஸ்வின், ரவிந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ஆகாஷ் தீப், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் யாஷ் தயால்.

google news