Connect with us

Cricket

இந்தியாவுக்காக அறிமுக போட்டியிலேயே சாதனை படைத்தும் ஓய்வு அறிவித்த வீரர் – ஏன் தெரியுமா?

Published

on

இந்திய அணிக்காக இரண்டு டி20 போட்டிகள், ஆறு ஒருநாள் போட்டிகளில் விளையாடியவர் பரிந்தர் சிரன். இடது கை வேகப்பந்து வீச்சாளரான இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக விளையாடினார். தற்போது அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்து இருக்கிறார்.

இந்திய அணிக்காக இருவித வெள்ளை பந்து போட்டிகளிலும் பரிந்தர் சிரன் 13 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்திய அணிக்காக அறிமுக டி20 போட்டியிலேயே சிறப்பாக விளையாடியவர் என்ற சாதனையை சிரன் படைத்திருக்கிறார். கடந்த ஜூன் 20, 2016 ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் அறிமுகமான பரிந்தர் சிரன் வெறும் பத்து ரன்களை மட்டும் விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

“கிரிக்கெட் பூட்களை அதிகாரப்பூர்வமாக தொங்கவிடும் இந்த வேளையில், எனது பயணத்தை மனம் முழுக்க நன்றியுடன் திரும்பி பார்க்கிறேன். 2009 ஆம் ஆண்டு குத்துச்சண்டையில் இருந்து கிரிக்கெட்டுக்கு மாறிய எனக்கு, இந்த விளையாட்டு ஏராளமான மறக்க முடியாத அனுபவங்களை கொடுத்திருக்கிறது.”

“வேகப்பந்து வீச்சு எனக்கு ராசியான ஒன்றாக மாறியது. இதன் மூலம் நான் பாரம்பரியம் மிக்க ஐபிஎல் அணிகளில் விளையாடும் வாய்ப்பை பெற்றேன். இதன் உச்சமாக 2016 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக விளையாடும் மிகப்பெரிய பெருமை எனக்கு கிடைத்தது.”

“சர்வதேச கிரிக்கெட் மிக குறுகிய பயணமாக இருந்த போதிலும், அவை எனக்கு மறக்க முடியாத பல அனுபவங்களை கொடுத்துள்ளது. என் பயணத்தின் போது எனக்கு சரியான வழிகாட்டியாக பயிற்சியாளர்கள் மற்றும் நிர்வாகத்தினர் அமைந்ததற்கு கடவுளுக்கு எப்போதும் நன்றியுள்ளவன் ஆகியிருக்கிறேன்,” என்று சிரன் தனது இன்ஸ்டா பதிவில் தெரிவித்துள்ளார்.

google news