சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) சாம்பியன்ஸ் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரை பாகிஸ்தான் நடத்த இருக்கிறது. இந்த தொடரில் பங்கேற்க பாகிஸ்தான் நாட்டுக்கு இந்திய கிரிக்கெட் அணி சுற்றுப் பயணம் மேற்கொள்ளுமா என்ற கேள்விக்கு இதுவரை பதில் இல்லை.
எனினும் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான அட்டவணை தயாரிப்பு, நிதி ஒதுக்கீடு என அடுத்தடுத்த பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அதன்படி அடுத்த ஆண்டு துவக்கத்தில் நடைபெற இருக்கும் 2025 சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்காக ஐசிசி சார்பில் 70 மில்லியன் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 5,86,58,18,000 ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் வெறும் 4.5 மில்லியன் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 37,70,88,300 மட்டுமே கூடுதல் செலவீனங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. கூடுதல் செலவீனங்களுக்காக நிதி ஒதுக்கப்பட்டு இருப்பதை தொடர்ந்து ஒருவேளை இந்தியா தனது அணியை பாகிஸ்தான் அனுப்பி வைக்காமல், மற்ற பகுதியில் போட்டி நடைபெறுமா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இதற்காக நிதி ஒதுக்கப்பட்டு இருப்பின், அது மிகவும் குறைவானது என்றும் கூறப்படுகிறது. ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக இருக்கும் ஜெய் ஷா சமீபத்தில் நடைபெற்ற ஐசிசி கூட்டத்தில் கலந்து கொண்டார் என்றும், அந்த கூட்டத்தில் வைத்து தான் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் டி20 ஆசிய கோப்பை தொடரை இந்தியாவிலும், 2027 ஆம் ஆண்டு 50 ஓவர் ஆசிய கோப்பை தொடரை வங்காளதேசத்திலும் நடத்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
தற்போது நிதி ஒதுக்கப்பட்டு இருப்பதை தொடர்ந்து சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் க்ரூப் சுற்று போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுவது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது. மேலும், அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஆசிய கோப்பை தொடரிலும் இந்தியா பாகிஸ்தான் அணிகள் க்ரூப் சுற்று போட்டியில் மோத உள்ளன.
இரு அணிகளும் இறுதி போட்டிக்கு முன்னேறும் பட்சத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மூன்றாவது முறையும் மோதுவதற்கான சூழல் உருவாகும்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…