Connect with us

Cricket

90 ஆண்டுகளில் முதல்முறை.. இந்திய மகளிர் அணி வரலாற்று சாதனை.. என்ன தெரியுமா?

Published

on

மகளிர் கிரிக்கெட்டில் இந்தியா மற்றும் தென் ஆப்பிக்கா அணிகள் மோதும் ஒன்-ஆஃப் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இரு அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளில் இந்திய அணி மகளிர் கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை படைத்து அசத்தியது.

இந்த டெஸ்ட் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 525 ரன்களை குவித்தது. இன்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணி துவக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

அதன்படி இந்த போட்டியின் 109-வது ஓவரை தென் ஆப்பிரிக்கா வீராங்கனை ஆனெரி டெர்க்சென் வீசினார். இதை எதிர்கொண்டு ரிச்சா கோஷ் முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். அப்போது இந்திய அணியின் ஸ்கோர் 579 ஆக மாறியது. இது மகளிர் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் ஆக மாறியது.

முன்னதாக ஆஸ்கிரேலியா அணி 9 விக்கெட்டுகளை இழந்து 575 ரன்களை அடித்ததே மகளிர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் ஆகும். இந்திய அணியின் இந்த வரலாற்று சாதனைக்கு துவக்க வீராங்கனைகளாக களமிறங்கிய ஷஃபாலி வெர்மா மற்றும் ஸ்மிருதி மந்தனா ஜோடியின் அதிரடி ஆட்டம் மிக முக்கிய காரணியாக அமைந்தது.

இந்த ஜோடி முதல் நாள் ஆட்டத்தில் விக்கெட் இழப்பின்றி 292 ரன்களை அடித்து அசத்தியது. இது மகளிர் கிரிக்கெட்டில் துவக்க வீராங்கனைகளின் அதிகபட்ச ஓபனிங் பார்ட்னர்ஷிப் ஆக மாறியது. இவர்கள் மட்டுமின்றி இந்தியா சார்பில் ஜெர்மியா ரோட்ரிக்ஸ், கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் மற்றும் ரிச்சா கோஷ் ஆகியோரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இவர்கள் முறையே 55, 69 மற்றும் 86 ரன்களை குவித்தனர். இதன் மூலம் இந்திய அணி 603 ரன்களை எட்டியது. இந்த போட்டியின் 115.1 ஓவர்களில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 603 ரன்களை எடுத்த நிலையில், முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்வதாக கேப்டன் அறிவித்தார். இதைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்கா அணி தனது முதல் இன்னிங்ஸை ஆடி வருகிறது.

google news