Connect with us

Cricket

தலைமை பயிற்சியாளர் இருக்கட்டும்… பந்துவீச்சு பயிற்சியாளர் யார் தெரியுமா? வெளியான புது தகவல்

Published

on

இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளர் பற்றிய தகவல்கள் தொடர்ச்சியாக வெளியாகி வருகின்றன. அதில், இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளராக அறிவிக்கப்படலாம் என்றே கூறப்படுகிறது. இது தொடர்பாக பி.சி.சி.ஐ. சார்பில் நேற்று நேர்காணல் நடைபெற்றதாகவும், அதில் கவுதம் கம்பீர் கலந்து கொண்டார் என்றும் தகவல்கள் வெளியாகின.

இதோடு, கவுதம் கம்பீர் மட்டுமின்றி தலைமை பயிற்சியாளர் பதவிக்கான நேர்காணலில் இந்திய அணியின் முன்னாள் வீரரும், தமிழருமான டபிள்யூ.வி. ராமனும் கலந்து கொண்டார் என்று கூறப்படுகிறது. நேற்று முதற்கட்ட நேர்காணல் நடைபெற்ற நிலையில், இன்றும் நேர்காணலின் அடுத்தடுத்த சுற்றுகள் நடைபெறுவதாக தெரிகிறது.

இந்த நிலையில், இந்திய அணியன் பந்துவீச்சு பயிற்சியாளர் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி, இந்திய அணிக்கு முன்னாள் வீரர்கள் ஜாகீர் கான் அல்லது அசீஷ் நெஹ்ரா ஆகியோர்களில் ஒருவரை பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்கலாம் என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர் கம்ரான் அக்மல் பி.சி.சி.ஐ. மற்றும் கவுதம் கம்பீரிடம் கருத்து தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த கம்ரான் அக்மல், “கவுதம் கம்பீர் பயிற்சியாளராக இருந்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி அந்த சீசனில் சிறப்பாக செயல்பட்டது, பிறகு அவர் ஆலோசகராக பணியாற்றிய கொல்கத்தா அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.”

“அவர் தலைசிறந்த வீரர், அவரிடம் புத்திசாலித்தனமான கிரிக்கெட் மூளை உள்ளது. அவருடன் நிறைய முறை விளையாடி இருக்கிறேன். நாங்கள் இருவரும் நீண்டநேரம் ஒன்றாக செலவிட்டு இருக்கிறோம். ஒன்றாக விளையாடி, உணவு சாப்பிட்டு, ஆரோக்கியமான உரையாடல்களை கடந்து வந்துள்ளோம். இன்றும் நாங்கள் சிறந்த நண்பர்களாக இருக்கிறோம். என்னை பொருத்தவரை கவுதம் கம்பீர் தலைமை பயிற்சியாளராகவும், அசிஷ் நெஹ்ரா அல்லது ஜாகீர் கான் பந்துவீச்சு பயிற்சியாளராக தேர்வு செய்யப்படலாம்,” என்று தெரிவித்தார்.

google news