உலக சாம்பியன்ஷிப் லெஜண்ட்ஸ் கிரிக்கெட் தொடர் பிரிட்டனில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பங்கேற்றுள்ள இந்திய சாம்பியன்ஸ் அணி தென் ஆப்பிரிக்கா சாப்பியன்ஸ் அணிக்கு எதிராக விளையாடியது. இந்த போட்டியின் போது சகோதரர்கள் ஆன இர்பான் பதான் மற்றும் யூசப் பதான் களத்தில் பேட் செய்த போது, இருவர் இடையே சிறு மோதல் உருவானது.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் வைரல் ஆனது. இந்த நிலையில், களத்தில் இருவரும் கோபமாக நடந்து கொண்டதை தொடர்ந்து இர்பான் பதான் தனது இன்ஸ்டாகிராமில் சகோதரர்கள் குணம் பற்றி பதிவிட்டு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், சகோதரர்கள் தனியாக இருக்கும் போது, பெற்றோருக்கு முன் எப்படி நடந்து கொள்வார்கள் என்பதை வெளிக்காட்டும் வாசகம் இடம்பெற்றுள்ளது.
வீடியோவில், அந்த போட்டியில் இருவரும் கோபமாக திட்டிக் கொண்ட வீடியோ காட்சிகளும், போட்டிக்கு பிறகு இர்பதான் பதான், தனது சகோதரர் யூசப் பதானுக்கு முத்தம் கொடுத்து, கட்டியணைத்த காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதில் யாரும் இல்லாத போது இருவரும் திட்டிக் கொள்வதும், பெற்றோருக்கு முன் பாச மழையை பொழிவதும் என வாசகம் எழுதப்பட்டு இருக்கிறது.
இந்த பதிவுக்கு “சகோததரர்களே இதனை புரிந்து கொள்ள முடிகிறதா?” என இர்பதான் பதான் தலைப்பிட்டுள்ளார். இர்பான் பதானின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இரு சகோதரர்கள் களத்தில் திட்டிக் கொண்ட போட்டியில் தென் ஆப்பிரிக்கா சாம்பியன்ஸ் அணி வெற்றி பெற்றது.
இதைத் தொடர்ந்து நடைபெற்ற அரையிறுதி போட்டியில் இந்தியா சாம்பியன்ஸ் மற்றும் ஆஸ்திரேலியா சாம்பியன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் இந்தியா சாம்பியன்ஸ் அணி 86 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து இந்தியா சாம்பியன்ஸ் மற்றும் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணிகள் இடையிலான இறுதிப் போட்டி இன்றிரவு நடைபெறுகிறது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…