இந்திய அணியில் மீண்டும் இடம்பிடிப்பதற்கான வாய்ப்பை இஷான் கிஷன் நங்கூரமாக பிடித்துக் கொண்டுள்ளார். புச்சி பாபு தொடரில் ஜார்கண்ட் அணிக்காக களமிறங்கிய இஷான் கிஷன் தனது மாநில அணிக்காக கேப்டன் செய்தார். முதல் போட்டியில் மகாராஷ்டிரா அணிக்கு எதிராக களமிறங்கிய ஜார்கண்ட் அணிக்கு இஷான் கிஷன் பேட்டிங்கில் பட்டையை கிளப்பினார்.
திருநெல்வேலியில் நடைபெற்ற இந்த போட்டியில், இஷான் கிஷன் 6-வது வீரராக களமிறங்கி ஆடினார். தனது அணி நல்ல நிலையில், பேட்டிங் ஆடிய போதிலும் இஷான் கிஷன் எடுத்ததும் அதிரடியாக ஆடினார். முதலில் 61 பந்துகளில் அரைசதம் கடந்த இஷான் கிஷன் திடீரென சிக்சர் மழையை பொழிந்தார்.
இதனால் 86 பந்துகளில் இஷான் கிஷன் சதம் அடித்தார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்த கையோடு, அணிக்காக ரெட்-பால் கிரிக்கெட் ஆடாமல் இருந்த இஷான் கிஷன் தற்போது தான் ரெட்-பால் கிரிக்கெட்டுக்கு கம்பேக் கொடுத்தார். இஷான் கிஷன் 107 பந்துகளில் 114 ரன்களை குவித்து அசத்தினார்.
இந்த போட்டியில் அதிரடியாக ஆடிய இஷான் கிஷன், தேர்வுக்குழுவுக்கு தலைவலியை கொடுத்திருக்கிறார். புச்சி பாபு தொடரைத் தொடர்ந்து இஷான் கிஷன் துலீப் கோப்பை தொடரில் விளையாட இருக்கிறார். இதிலும் நன்றாக ஆடும் பட்சத்தில் இந்திய டெஸ்ட் அணியில் இஷான் கிஷன் மீண்டும் இடம்பிடிக்க முடியும். செப்டம்பர் 5 ஆம் தேதி துவங்கும் துலீப் கோப்பை தொடர் ஆந்திர பிரதேசம் மற்றும் கர்நாடகா மாநிலங்களில் நடைபெற இருக்கிறது.
துலீப் கோப்பையில் வீரர்களின் பங்களிப்பை பொருத்தே தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்கர் வங்காளதேசம் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்வது பற்றி இறுதி முடிவு எடுக்க இருக்கிறார்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…