Connect with us

Cricket

ஸ்கிராட்ச்-ல இருந்து ஆரம்பிக்கும் இஷான் கிஷன்

Published

on

இந்திய அணியின் நட்சத்திர வீரராக வளர்ந்து வந்த இளம் வீரர் இஷான் கிஷன். உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடாமல் இருந்ததன் விளைவாக இவர் 2023-24 ஆண்டுக்கான பிசிசிஐ ஒப்பந்த பட்டியலில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்று பலமுறை எச்சரித்தும், இஷான் கிஷன் அதனை தவிர்த்து வந்ததாக தெரிகிறது. இதையடுத்து அவரை இந்திய அணி வீரர்களுக்கான வருடாந்திர ஒப்பந்தத்தில் இருந்து பிசிசிஐ விடுவித்து நடவடிக்கை எடுத்தது.

அணியில் இருந்து வெளியேற்றப்பட்டு இருக்கும் சூழலில், மீண்டும் அணியில் இடம்பிடிக்க இஷான் கிஷன் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி தேசிய தேர்வுக்குழு உறுப்பினர்கள் மற்றும் நலம்விரும்பிகள் சிலரின் ஆலோசனை படி இஷான் கிஷன் உள்ளூர் கிரிக்கெட் விளையாட முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

இஷான் கிஷன் உள்ளூர் கிரிக்கெட்டில் ஜார்கண்ட் கிரிக்கெட் கூட்டமைப்பிற்காக விளையாட இருக்கிறார். சமீபத்தில் வெளியான 25 பேர் அடங்கிய வீரர்கள் பட்டியலில் ஜார்கண்ட் அணியில் இஷான் கிஷனின் பெயர் இடம்பெற்று இருப்பதாக கூறப்படுகிறது.

முன்னதாக இந்த ஆண்டு துவக்கத்தில் நடைபெற்ற டி.ஒய். பாட்டீல் டி20 கோப்பை தொடர் மற்றும் அதன்பிறகு நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இஷான் கிஷன் விளையாடினார்.

கடைசியாக இவர் விளையாடிய 14 போட்டிகளில் இஷான் கிஷன் 320 ரன்களை குவித்தார். இவரது சராசரி 22.86 ஆகும், ஸ்டிரைக் ரேட் 148.84 ஆகும். டி20 கிரிக்கெட்டில் இஷான் கிஷ் 32 இன்னிங்ஸில் 796 ரன்களை அடித்துள்ளார்.

google news