இங்கிலாந்து அணியின் மூத்த வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன், லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் கடந்த வாரம் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியோடு சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். இந்த நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக மீதமுள்ள டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணியின் பந்துவீச்சு ஆலோசகராக செயல்பட உள்ளார்.
இரு அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை (வியாழன் கிழமை) துவங்குகிறது. இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் இந்த போட்டி நாட்டிங்காமில் உள்ள டிரெண்ட் பிரிட்ஜில் நடைபெறுகிறது. இரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் ஓய்வு பெற்ற ஜேம்ஸ் ஆண்டர்சன், இரண்டாவது போட்டியில் இருந்து ஆலோசகராக பணியாற்றுகிறார்.
கடந்த வெள்ளிக் கிழமை ஓய்வு பெற்ற ஜேம்ஸ் ஆண்டர்சன் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார். தான் விளையாடிய கடைசி டெஸ்ட் போட்டியில் ஜேம்ஸ் ஆண்டர்சன் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் மொத்தமாக 704 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலின் முதல் இரு இடங்களில் முத்தையா முரளிதரன் மற்றும் ஷேன் வார்னே உள்ளனர். முன்னதாக இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 114 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. அபார வெற்றியுடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு இணையத்தில் வாழ்த்துகள் குவிந்தன.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…