எல்லாம் OK, ஆனா அது பெரிய ஏமாற்றம் தான் – ஜேம்ஸ் ஆண்டர்சன்

0
421

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைசிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவர் ஜேம்ஸ் ஆண்டர்சன். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஜேம்ஸ் ஆண்டர்சன் ஓய்வு பெற்றார். லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இந்த போட்டி நடைபெற்றது. இதில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 114 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த டெஸ்ட் போட்டியோடு ஓய்வு பெற்ற நிலையில், போட்டி முடிந்த பிறகு பேசிய ஜேம்ஸ் ஆண்டர்சன் உருக்கமாக பேசினார். அப்போது, “இந்த தருணத்தில் என் கண்ணீரை கட்டுப்படுத்த முயற்சித்து வருகிறேன். ஆனாலும், 20 ஆண்டுகள் விளையாடி வந்ததை நினைத்து மிகவும் பெருமை கொள்கிறேன். இது மிகச்சிறந்த முயற்சி, அதுவும் ஒரு வேகப்பந்து வீச்சாளருக்கு இது விசேஷமான ஒன்று.”

“இந்த அளவுக்கு வந்துள்ளதை நினைத்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். எனது கிரிக்கெட் வாழ்க்கை முழுவதிலும் அதிகளவு காயங்கள் இன்றி கடந்து வந்துள்ளதை நினைத்து மகிழ்ச்சியாகவும், அதிர்ஷ்டம் உள்ளவனாகவும் நினைக்கிறேன். இங்கிலாந்து அணிக்காக விளையாடியது, உலகின் தலைசிறந்த பணிகளில் ஒன்று. இதனை நீண்ட காலம் செய்ததற்கு பெருமை கொள்கிறேன்.”

“வெற்றி, தோல்விகள் அடங்கிய பயணத்தில் நிறைய உணர்ச்சிகள் நிரம்பியுள்ளன. முதல் நாளில் என் குழந்தைகள் மணி அடிப்பதை பார்த்தேன். இன்று இரு அணி வீரர்களுக்கு மதிதியில் நடந்து வந்தது பல உணர்ச்சிகளை வெளிக்கொண்டு வந்தது. உண்மையில் பந்து வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறேன் என்பதையே மறந்துவிட்டேன். ஆனால் இது சிறப்பாக இருந்தது. ரசிகர்களின் வரவேற்பு அற்புதமாக இருந்தது.”

“அந்த கேட்ச் தவறவிட்டது ஏமாற்றமாகவே உள்ளது. ஆனால், இது அற்புதமான வாரமாக இருக்கிறது. ரசிகர்கள் மற்றும் சக வீரர்கள் நடந்து கொண்ட விதம், என நான் செய்த எல்லாவற்றையும் நினைத்து பெருமை கொள்கிறேன். தலைசிறந்த வீரர்களுடன் விளையாடி இருப்பதை அதிர்ஷ்டமாக நினைக்கிறேன்,” என்று தெரிவித்தார்.

google news

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here