டி20 உலகக் கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. மழையின் இடர்பாடு ஒருபுறம் அச்சுறுத்திய போதிலும், இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
இந்த போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் ஒற்றை டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்காக அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய இரண்டாவது வீரர் என்ற பெருமையை ஜஸ்பிரித் பும்ரா பெற்று இருக்கிறார். நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் ஜஸ்பிரித் பும்ரா நேற்றிரவு நடைபெற்ற அரையிறுதி போட்டி வரை 13 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஒரே டி20 உலகக் கோப்பை தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் முதலிடத்தில் உள்ளார். இவர் இதுவரையிலான போட்டிகளில் இந்திய அணிக்காக 15 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். நடப்பு உலகக் கோப்பை தொடரில் கடைசியாக விளையாடிய இரண்டு போட்டிகளில் அர்ஷ்தீப் சிங் விக்கெட் எதுவும் வீழத்தவில்லை.
முன்னதாக 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் 12 விக்கெட்டுகளை வீழ்த்திய ஆர்.பி. சிங் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார்.
நேற்றிரவு நடைபெற்ற அரையிறுதி போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணி சார்பில் கேப்டன் ரோகித் சர்மா அரைசதம் (57) அடித்தார். இவரை தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் 47 ரன்களையும் விளாசினர். இதன் மூலம் இந்தியா 171 ரன்களை குவித்தது. அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 103 ரன்களில் ஆல் அவுட் ஆனதால், இந்தியா 68 ரன்களில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…