இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இது தொடர்பான பதிவில் அவர் “கனவில் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்” என்று துவங்கும் தலைப்பிட்டுள்ளார்.
டி20 உலகக் கோப்பையை வென்றதற்கு தனக்கும், தனது அணிக்கும் கிடைத்த வரவேற்புக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பும்ரா எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். 30 வயதான ஜஸ்பிரித் பும்ரா நடைபெற்று முடிந்த டி20 உலகக் கோப்பை தொடரில் மொத்தம் 15 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதோடு ஒவ்வொரு போட்டியிலும் இந்திய அணி வெற்றிக்கு பும்ரா காரணமாக இருந்துவந்துள்ளார்.
இந்த நிலையில், பும்ரா தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள வீடியோவுக்கு, கடந்த சில நாட்களுக்காக நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன். நான் கனவில் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். இந்த கனவு எனக்கு மகிழ்ச்சியையும், நன்றியுணர்வையும் கொடுத்துள்ளது என தலைப்பிட்டுள்ளார்.
இத்துடன் அவர் இணைத்துள்ள வீடியோவில் மும்பை மெரைன் டிரைவில் நடைபெற்ற வெற்றி கொண்டாட்டத்தில் எடுக்கப்பட்ட காட்சிகளும், பின்னணியில் வான்கடே மைதானத்தில் நடைபெற்ற பாராட்டு விழாவில் விராட் கோலி பும்ராவை பாராட்டி தெரிவித்த வாழ்த்து செய்தியும் ஒலிக்கிறது. இந்த வீடியோ 42 நொடிகள் ஓடுகிறது.
கடந்த 29 ஆம் தேதி நடைபெற்ற இறுதிப் போட்டியில் 30 பந்துகளில் 30 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற நிலையில், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஹர்திக் பாண்டியா சிறப்பான பந்துவீச்சு மூலம் இந்திய வெற்றியை உறுதிப்படுத்தினர். இறுதிப் போட்டி மட்டுமின்றி தொடரின் மற்ற போட்டிகளிலும் பும்ரா பந்துவீசிய விதத்தை பாராட்டிய விராட் கோலி, அவர் ஒரு தலைமுறையின் வீரர் என்று தெரிவித்தார்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…