பிசிசிஐ தலைவராக இருக்கும் ஜெய் ஷா கடந்த சில நாட்களுக்கு முன் ஐசிசி தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். ஜெய் ஷா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், இது தொடர்பான ஐசிசி கூட்டத்தில் என்ன நடந்தது? எத்தனை பேர் ஜெய் ஷா தலைவராக வாக்களித்தனர் என்ற விவரங்கள் மர்மமாகவே இருந்தது.
தற்போது தனியார் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல்களில், ஐசிசி சார்பில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் 16 உறுப்பினர்களும் பங்கேற்றதாக கூறப்படுகிறது. இவர்களில் ஜெய் ஷாவிற்கு 15 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மட்டும், எந்த நிலைப்பாடும் எடுக்காமல் அமைதி காக்க முடிவு செய்தது.
“பாகிஸ்தான் எந்த தகவலும் வழங்கவில்லை. மேலும், ஜெய் ஷாவிற்கு ஏகப்பட்ட ஆதரவு கிடைத்த நிலையில் அவர்களின் முடிவு தேவைப்படவில்லை. இதுதொடர்பான ஒட்டுமொத்த வழிமுறைகளின் போதும் பாகிஸ்தான் வாரியம் அமைதி காப்பதில் உறுதி கொண்டிருந்தது,” என்று கூறப்படுகிறது.
ஐசிசி தலைவராக தேர்வு செய்யப்பட்டது குறித்து பேசிய ஜெய் ஷா, “சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவராக நியமிக்கப்பட்டதை தாழ்மையுடன் ஏற்கிறேன். கிரிக்கெட்டை மேலும் உலகறிய செய்வதற்கு ஐசிசி குழு மற்றும் உறுப்பு நாடுகளுடன் இணைந்து பணியாற்ற கடமைப்பட்டுள்ளேன்.”
“கிரிக்கெட்டில் உள்ள பல்வேறு வகையான வடிவங்களை சம அளவு முக்கியத்துவம் கொடுத்து, அதிநவீன தொழில்நுட்பங்களை ஏற்றுக் கொண்டு எங்களது பிரபல போட்டி தொடர்களை மேலும் பல்வேறு சர்வதேச சந்தைகளில் அறிமுகம் செய்யும் முக்கியமான கட்டத்தில் நிற்கிறோம். கிரிக்கெட்டை இதுவரை இல்லாத அளவுக்கு பிரபலமாக்குவதே எங்களது இலக்கு,” என்று தெரிவித்தார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவராக தேர்வு செய்யப்பட்டதை அடுத்து பல்வேறு கிரிக்கெட் வீரர்கள், கிரிக்கெட் அமைப்புகள் மற்றும் தலைவர்கள், முன்னாள் வீரர்கள் என பலரும் ஜெய் ஷாவிற்கு வாழ்த்து தெரிவித்தனர்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…