கிரிக்கெட் வரலாற்றில் முதல் வீரர்.. ரபாடா அபார சாதனை!

தென் ஆப்பிரிக்கா அணியை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபாடா. இவர் தற்போது வங்கதேசம் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தனது தேசிய அணிக்காக விளையாடி வருகிறார். இரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வங்கதேசத்தில் உள்ள டாக்காவில் துவங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி தென் ஆப்பிரிக்கா அணிக்கு வியன் முல்டர் மற்றும் ககிசோ ரபாடா ஜோடி முதற்கட்ட ஓவர்களை வீசினர். முதலில் முல்டர் தன் பங்கிற்கு ஸ்விங் மற்றும் பவுன்சர்களால் வங்கதேச வீரர்களை அச்சுறுத்தினார். அடுத்து வந்த ககிசோ ரபாடா பிட்ச்-க்கு ஏற்றவாரு பந்துவீசியதில் வங்கதேச அணியின் முஷ்பிகுர் ரஹீம் மற்றும் லிட்டன் தாஸ் விக்கெட்டுகளை இழந்து வெளியேறினர்.

இந்த இரு விக்கெட்டுகளை சேர்த்து ககிசோ ரபாடா டெஸ்ட் கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகள் எனும் மைல்கல்லை எட்டினார். மேலும், 11,817 டெலிவரிக்களில் 300 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் வீரர் என்ற பெருமையை ரபாடா பெற்றுள்ளார். முன்னதாக வக்கர் யூனஸ் 12,602 பந்துகளிலும், டேல் ஸ்டெயின் 12,605 பந்துகளிலும், ஆலன் டொனால்டு 13,672 பந்துகளிலும் மால்கம் மார்ஷல் 13,728 பந்துகளிலும் இந்த மைல்கல்லை எட்டியுள்ளனர்.

இதன் காரணமாக 12,000-க்கும் குறைந்த பந்துகளை வீசி டெஸ்ட் கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பந்துவீச்சாளர் ஆகியிருக்கிறார் ககிசோ ரபாடா. பாகிஸ்தானை சேர்ந்த யூனிஸ் அதிவேகமாக 300 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய வீரராக இருந்தார். தற்போது ரபாடா 785 பந்துகள் குறைவாக வீசி, அதிவேகமாக 300 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார்.

Web Desk

Recent Posts

சொந்த வீடு தாங்க சூப்பர்!…அதிகரித்து வரும் எண்ணிக்கை…

அனராக் எஃப்ஐசிசிஐ அன்மையில் இந்தியாவில் சொந்த வீடு வாங்க விரும்புபவர்கள் குறித்த ஆய்வினை நடத்தியிருக்கிறது. கொரோனா தொற்று காலத்திற்கு முன்னர்…

3 mins ago

உங்க சொந்த வீடு கனவு நினைவாக போகுது… அரசே எல்லாம் செய்து.. வந்தாச்சு புது லிஸ்ட்..!

அரசு கொடுக்கும் இலவச வீடு தொடர்பான புதிய தகவல் வெளியாகி உள்ளது. இதில் அரசிடம் இருந்து சொந்தமாக வீடு வாங்கும்…

15 mins ago

பட்டா மாற்றம் செய்ய வேண்டுமா..? இனி தேவையில்லாம அலைய வேண்டாம்… எப்படி செய்வது..?

ஆன்லைனில் பட்டா மாற்றம் செய்யும் வசதியை தமிழக அரசு சமீபத்தில் கொண்டு வந்திருந்தது. இது தொடர்பான தகவலை நாம் தெரிந்து…

1 hour ago

ஓய்வு காலத்தில் கை நிறைய வருமானம்… சீனியர் சிட்டிசன்களுக்கு மிகச்சிறந்த வாய்ப்பு…!

பிக்சட் டெபாசிட் திட்டத்தில் சீனியர் சிட்டிசன்களுக்கு அதிக லாபம் கிடைக்கின்றது. இது தொடர்பான தகவலை இந்த தொகுப்பில் நாம் தெரிந்து…

2 hours ago

நோ சேஞ்ச் சொன்ன தங்கம்…விலை உயர்ந்த வெள்ளி…

தங்கத்தின் விலை நாள் தோறும் தொடர்ச்சியாக கண்காணிகப்பட்டு வரப்படுகிறது. தங்கத்தை போலவே தான் வெள்ளியின் விலையும் உற்று நோக்கப்பட்டு வருகிறது.…

2 hours ago

டிகிரி முடித்தவர்களுக்கு இண்டிகோ ஏர்லைன்ஸில் வேலை… அப்ளை பண்ண மறந்துடாதீங்க..!

இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்:…

18 hours ago