இலங்கையில் லங்கா பிரீமியர் லீக் எனும் டி20 கிரிக்கெட் தொடர் தொடங்கி தினம் தினம் ஒரு போட்டி எனும் வகையில் ஐபிஎல் போலேவே விறு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், நேற்று நடைபெற்ற 2வது லீக் போட்டியில் கால்லே கிளாடியேட்டர் மற்றும் தம்புலா ஜெய்ண்ட்ஸ் ஆகிய அணிகள் மோதியது.
இந்த நிலையில் இந்த போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் இடையில் மைதானத்திற்குள் திடீரென பெரிய பாம்பு ஒன்று எப்படியோ நுழைந்தது, நுழைந்த அந்த பாம்பு மைதானத்தை சுத்தி சுத்தி ரவுண்டு அடித்துக் கொண்டிருக்க அதனைப் பார்த்த ஷகிப் அல் ஹசன் சற்று சிரித்துக்கொண்டே பார்த்துக்கொண்டு இருந்தார்.
பிறகு அங்கிருந்த நடுவர்கள் மற்றும் அணியின் வீரர்கள் ஷகிப் அல் ஹசனிடம் பந்து வீச கூறினார்கள். பிறகு ஷகிப் அல் ஹசன் அங்கு பாம்பு இருப்பதாக செய்கையை காட்டினார். பிறகு அந்த பாம்பு வீரர்களுக்கும் ரசிகர்களுக்கும் எந்த தொல்லையும் கொடுக்காமல் அமைதியாக வெளியே சென்று விட்டது.
இருப்பினும் திடீரென பாம்பு மைதானத்திற்குள் நுழைந்த காரணத்தினால் அங்கு பரபரப்பான சூழ்நிலைவியது. பிறகு பாம்பு வெளியே சென்றவுடன் போட்டி மீண்டும் நடைபெற்றது இது தொடர்பான வீடியோக்கள் புகைப்படங்கள் தமிழ் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது அந்த வீடியோவை நெட்டிசன்கள் தங்களுக்கு பிடித்த ஆடியோக்களை வைத்து எடிட் செய்து கலாய்த்து வருகிறார்கள்.
மேலும் நேற்று நடைபெற்ற போட்டியில் முதலில் டாஸ் முதலில் பேட்டிங் செய்த கால்லே கிளாடியேட்டர் அணி 20 ஓவர்களில் அதிரடியாக செயல்பட்டு 180/5 ரன்கள் எடுத்து. அடுத்ததாக 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தம்புலா அணியும் 20 கால்லே கிளாடியேட்டர் அணியை போலவே ஓவர்களில் 180 ரன்கள் எடுத்ததால் போட்டி சமநிலையில் முடிந்தது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…