Cricket
மேட்ச் பிக்சிங் புகார்.. நீதிமன்றம் செல்லும் பாக். துணை பயிற்சியாளர்
டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து லீக் சுற்றோடு வெளியேறிய பாகிஸ்தான் அணி மீது மேட்ச் பிக்சிங் குற்றச்சாட்டு எழுந்தது. அந்நாட்டு வீரர்கள் குடும்பத்தாரோடு டி20 தொடரில் விளையாட அமெரிக்கா சென்றது, தொடருக்கு பிறகு அந்நாட்டு கேப்டன் பாபர் அசாமுக்கு விலை உயர்ந்த கார் பரிசளிக்கப்பட்டது உள்ளிட்டவை மேட்ச் பிக்சிங் புகாருக்கு வழிவகுத்தது.
இந்த நிலையில், பாகிஸ்தான் அணியின் துணை பயிற்சியாளர் அசார் முகமது பாகிஸ்தான் அணி மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று தெரிவித்தார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், இந்த குற்றச்சாட்டுகள் சட்ட ரீதியில் எதிர்கொள்ளப்படும். சமூக வலைதளங்களில் பொய் குற்றச்சாட்டுகள் பரப்பப்படுவதை காண்கிறேன். இந்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை, பொய். இவற்றை கேட்கவே வருத்தமாக உள்ளது.
பொய் தகவல்களை கூறி குற்றச்சாட்டு தெரிவிப்பது, மக்களை தவறாக வழிநடத்துவது மிகவும் அபாயகரமானது. ஆதாரம் இன்றி பேசுவது சட்டப்படி குற்றம் ஆகும். இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுவோரை சட்ட ரீதியாகவே எதிர்கொள்ள வேண்டும். பொய் தகவல்களை கூறி ஃபாளோயர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்திக் கொள்ள நினைப்பது, சமூக வலைதளங்களில் கவனம் ஈர்க்க முயற்சிப்பதை ஏற்றுக் கொள்ளவே முடியாது.
இந்த விவகாரம் தொடர்பாக சமூக வலைதளங்களில் ஆலோசனை செய்யப்போவதில்லை. இதுபோன்ற விவகாரங்களில் கருத்து தெரிவிப்பதை தவிர்க்க அனைவரிடமும் கேட்டுக் கொள்கிறேன். மேட்ச் பிக்சிங் புகார்களை மக்கள் தவிர்க்க வேண்டும். இதுபோன்ற பொய் தகவல்களை பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும், தெரிவித்துள்ளார்.