வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற முதல் டி20 கிரிக்கெட் போட்டியின் மூலம் இந்திய அணி வீரர் திலக் வர்மா முதன்முதலாக சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அறிமுகமானார். ஐபிஎல் போட்டியில் அதிரடியாக விளையாடிய அவர் இந்த வெஸ்ட் இண்டீஸ் எதிராக நடைபெற உள்ள டி20 தொடரில் இந்திய அணியில் சேர்க்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் நேற்று முதல் டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்ற நிலையில் அந்த போட்டியில் அதிரடியாக விளையாடிய திலக் வர்மா 22 பந்துகளில் 39 ரன்கள் எடுத்திருந்தார். இந்த போட்டியில் இந்தியா தோல்வியடைந்தாலும் கூட திலக்வருமாவின் பேட்டிங்கை பற்றி பலரும் பாராட்டி பேசி வருகின்றனர்.
அந்த வகையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா சமீபத்திய பேட்டி ஒன்றில் திலக் வர்மாவின் பேட்டிங் பற்றி பேசி உள்ளார். இது குறித்து பேசி அவர் எனக்கு திலக் வர்மாவின் பேட்டிங்கை பார்க்கும் போது மிகவும் பிடித்து விட்டது. அவருடைய பேட்டிங் முதல் போட்டியிலேயே என்னை மட்டும் இன்றி பலரையும் கவர்ந்து விட்டதாக நான் உணர்கிறேன்.
என்னை பொறுத்தவரை இந்திய அணியில் அவருக்கு நல்ல எதிர்காலம் இருப்பதாக நான் நினைக்கிறேன். இனிமேல் வரும் போட்டிகளிலும் அவர் சிறப்பாக செயல்படுவார் எனவும் நான் நம்புகிறேன். முதல் போட்டியிலேயே இப்படி ஒரு அதிரடியாக விளையாடுவது என்பது சாதாரண விஷயம் இல்லை ஆனால் திலக் வர்மா அதனை அருமையாக செய்துள்ளார். அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்’ என கூறியுள்ளார்.
ராபின் உத்தப்பாவை போல இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவும் போட்டி முடிந்த பிறகு திலக்வர்மாவை பற்றிய பேசினார். இதுகுறித்து பேசிய அவர் திலக்வர்மாவின் பேட்டிங்கை பார்ப்பதற்கு எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகும் போது இப்படி ஒரு மெர்சலான ஆட்டம் யாருக்குமே அமைவதில்லை. இந்திய அணியின் எதிர்காலம் அவர்தான் ‘ என கூறியுள்ளார்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…