துலீப் கோப்பை தொடரில் இந்தியா ஏ மற்றும் இந்தியா பி அணிகள் இடையிலான போட்டியில் ஆகாஷ் தீப் இந்தியா ஏ அணிக்காக விளையாடினார். சமீபத்தில் நடைபெற்ற துலீப் கோப்பை தொடரில் இந்தியா பி அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா ஏ அணிக்காக ஆகாஷ் தீப் 9 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
இதன் மூலம், இவர் வங்கதேசம் அணிக்கு எதிரான டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ளார். பந்துவீச்சில் அபாரமாக செயல்பட்ட ஆகாஷ் தீப், வாஷிங்டன் சுந்தர் மற்றும் நிதிஷ் ரெட்டியை அவுட் செய்த விதம் குறித்து பேசியுள்ளார்.
அப்போது “நிதிஷ் ரெட்டிக்கு முதல் இன்னிங்ஸிலும், வாஷிங்டன் சுந்தருக்கு இரண்டாவது இன்னிங்ஸிலும் நான் பந்துவீசினேன். நெட்ஸில் வாஷிங்டன் சுந்தருக்கு நான் அதிகளவில் பந்துவீசி இருக்கிறேன். நான் எப்படி பந்துவீசுவேன் என்று அவருக்கு நன்றாகவே தெரியும். இதனால், அவரிடம் நான் அதுவரை வீசாத வகையில் பந்துவீச வேண்டும் என்று நினைத்தேன்.”
“இடதுகை பேட்டருக்கு அரவுண்ட் தி விக்கெட்டில் இருந்து பந்துவீசும் போது, பந்து தானாகவே ஷைன் உள்ள பகுதியில் நகரும். இது குறித்து நான் ஷமியிடம் பேசினேன், அப்போது பந்தை எப்படி திருப்ப வேண்டும் என்று கேட்டேன். அவர் அதை செய்து நான் பார்த்திருக்கிறேன். அவர் என்னிடம் பந்தை திருப்புவது பற்றி அதிக கவனம் செலுத்த வேண்டாம். பந்து தானாக திரும்பும் என்றார்.”
“ஒரே மாதிரி செல்லும் போது, பந்து தானாக ஷைன் உள்ள பக்கமாக திரும்பும், இது பேட்டர்களுக்கு கடினமாக இருக்கும். ஆனால், இந்த விஷயத்தில் அதிக முயற்சை தேவை என்று அவர் என்னை எச்சரித்தார். பந்துவீச்சாளராக அதை செய்ய முடியும் எனில், பேட்டர்கள் பந்தை துரத்த முயற்சிப்பார்கள்,” என்று ஆகாஷ் தீப் தெரிவித்தார்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…