இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி கால் தசைநார் பகுதியில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட பிறகு, தற்போது தேசிய கிரிக்கெட் அகாடமியில் சிகிச்சைக்கு பிந்தைய பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். தனது உடல்நிலை முழுமையாக தயாராகி விட்டதை உணர்த்தும் வகையில், பயிற்சியின் போது பந்துவீசிய வீடியோ மற்றும் புகைப்படங்களை முகமது ஷமி சமூக வலைத்தள பதிவுகளில் அவ்வப்போது தெரிவித்து வந்தார்.
இந்த வரிசையில், முகமது ஷமி உள்நாட்டு கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பையில் வங்காள அணிக்காக விளையாட இருக்கிறார். ரஞ்சி கோப்பை தொடரைத் தொடர்ந்து நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் அணியில் இடம்பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அக்டோபர் 11 ஆம் தேதி உத்திர பிரதேசம் அணிக்கு எதிரான போட்டியில் முகமது ஷமி வங்காள அணிக்காக விளையாடுவார் என்று கூறப்படுகிறது.
இத்துடன் அக்டோபர் 18 ஆம் தேதி கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் அவர் விளையாடுவாரா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இரு போட்டிகள் இடையில் இரண்டு நாட்கள் இடைவெளி மட்டுமே இருப்பதால் அவர் இரு போட்டிகளிலும் விளையாடுவது கேள்விக்குறியான விஷயமாக பார்க்கப்படுகிறது.
இதைத் தொடர்ந்து இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் நியூசிலாந்து அணி இங்கு மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடர் அக்டோபர் 19 ஆம் தேதி துவங்குகிறது. இதைத் தொடர்ந்து அக்டோபர் 24 ஆம் தேதி இரண்டாவது டெஸ்ட் போட்டியும், நவம்பர் 1 ஆம் தேதி மூன்றாவது டெஸ்ட் போட்டியும் நடைபெற இருக்கிறது.
அந்த வகையில் முகமது ஷமி மூன்றில் ஒன்றிரண்டு போட்டிகளில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி அங்கு டெஸ்ட் தொடர்களில் விளையாட இருக்கிறது.
இந்திய அணியின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான முகமது ஷமி கடைசியாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி ஜெர்சியில் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…