Connect with us

Cricket

ஐபிஎல் 2025-ல விளையாடுவேனா? டோனி பதில்!

Published

on

ஐபிஎல் 2025 தொடருக்கான வீரர்கள் விதிமுறைகள் மற்றும் வீரர்களை அணிகள் தக்க வைத்துக் கொள்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் சில தினங்களுக்கு முன் மும்பையில் உள்ள பிசிசிஐ தலைமையகத்தில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் ஐபிஎல் அணி உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தைத் தொடர்ந்து ஒவ்வொரு அணி குறித்தும் தகவல்கள் தொடர்ச்சியாக வெளியாகி வருகின்றன.

அந்த வரிசையில், ஐபிஎல் அணிகள் வீரர்களை தக்க வைத்துக் கொள்ளும் நடைமுறைகளில் தங்களின் எதிர்பார்ப்புகளை தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும், சில அணிகள் அதிக வீரர்களை தக்க வைத்துக் கொள்வதற்கு ஏதுவாக விதிகளில் மாற்றம் கோரி வலியுறுத்தியதாக தகவல்கள் வெளியாகின. இவற்றுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது நட்சத்திர வீரர் எம்.எஸ். டோனியை தக்கவைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளில் தீவிரம் காட்டியதாக கூறப்படுகிறது.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் முடிவுக்கு வரும்போதே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் எம்எஸ் டோனி அடுத்த சீசனிலும் விளையாடுவாரா என்ற கேள்வி பரவலாக எழுந்தது. இதற்கு இதுவரை எவ்வித தெளிவான பதிலும் கிடைக்காமல் உள்ளது. இந்த நிலையில், எம்எஸ் டோனி அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளையாடுவாரா என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர், “இதற்கு இன்னும் அதிக நேரம் இருக்கிறது. வீரர்களை தக்க வைப்பது தொடர்பான முடிவுகள் எடுக்கப்படாமல் உள்ளது. தற்போது இந்த விவகாரத்தில் பந்து நீதிமன்றத்தில் உள்ளது. விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் இறுதியானதும், இது பற்றி நான் முடிவு எடுப்பேன். எனினும், அந்த முடிவு அணியின் நன்மையை எந்த விதத்திலும் பாதிக்காத ஒன்றாகவே இருக்கும்,” என்று தெரிவித்தார்.

ஐபிஎல் தவிர்த்து தற்போதைய காலக்கட்டத்தில் தலைசிறந்த பேட்டர் மற்றும் பவுலர் யார் என்ற கேள்விக்கு பதில் அளித்தார். அப்போது, “பந்துவீச்சாளர்களை பொருத்தவரை என்னால் பும்ராவை சிறந்த பவுலராக தேர்வு செய்ய முடியும். ஆனால், பேட்டர்களை அப்படி தேர்வு செய்ய முடியாது. நிறைய பேட்டர்கள் சிறப்பாக செயல்படுகின்றனர். இதை கூறுவதால், பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்படுவதில்லை என்று அர்த்தமில்லை,” என்றார்.

google news