2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்காக ஆயத்த பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஐபிஎல் அணி உரிமையாளர்கள் வரவிருக்கும் ஐபிஎல் தொடரில் விதிமுறை மாற்றம் கோரி பிசிசிஐ-இடம் கோரிக்கை வைத்துள்ளதாக கடந்த சில வாரங்களாக தகவல்கள் வெளியாகி வந்தன.
இதில் 2025 ஐபிஎல் தொடரில் சர்வதேச கிரிக்கெட்டில் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக விளையாடாமல் உள்ள வீரர்களை அன்கேப்டு வீரர்களாக கருத்தும் நடைமுறையை மீண்டும் கொண்டுவருவதற்கு சிஎஸ்கே உள்பட சில அணி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்ததாக கூறப்பட்டு வந்தது. இந்த நடைமுறையை கொண்டு வருவதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் எம்.எஸ். டோனி விளையாடுவார் என்ற வகையில் தகவல்கள் வெளியாகி வந்தன.
இந்த நிலையில், சிஎஸ்கே அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் இந்த தகவல்கள் அனைத்தையும் மறுத்துள்ளார். மேலும், சிஎஸ்கே சார்பில் அன்கேப்டு வீரர்கள் தொடர்பான ஐபிஎல் விதியை மீண்டும் கொண்டுவர எந்த கோரிக்கையும் விடுக்கப்படவில்லை என்று தெரிவித்தார். இதோடு, இந்த விதிமுறையை மீண்டும் கொண்டுவருவது பற்றி பிசிசிஐ தான் கோரிக்கை விடுத்தது என்று தெரிவித்தார்.
“எனக்கு அதுபற்றி எதுவும் தெரியாது. நாங்கள் அப்படி கோரிக்கை விடுக்கவில்லை. அவர்கள் (பிசிசிஐ) தான் அன்கேப்டு வீரர்கள் தொடர்பான விதியை வைத்துக் கொள்வது பற்றி தெரிவித்தனர். எனினும், அவர்கள் (பிசிசிஐ) இது பற்றி எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. விதிகள் மற்றும் வழிமுறைகளை பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்,” என்று காசி விஸ்நாதன் தெரிவித்தார்.
சிஎஸ்கே அணியில் எம்எஸ் டோனியின் எதிர்காலம் பற்றி அவர் எந்த தகவலையும் வழங்கவில்லை. அந்த வகையில், 2025 ஐபிஎல் தொடரில் எம்எஸ் டோனி களமிறங்குவாரா என்பது தற்போது வரை விடை இல்லாத கேள்வியாகவே உள்ளது. கடந்த ஆண்டு யாரும் எதிர்பார்க்காத வகையில், சிஎஸ்கே அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விடைபெற்ற எம்எஸ் டோனி, பேட்டிங்கிலும் 8 ஆவது வீரராக களமிறங்கி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார்.
2024 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே கேப்டனாக அந்த அணியின் துவக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் பொறுப்பேற்றார். அணியின் எதிர்காலத்தை வழிநடத்தும் வகையில் புதிய மாற்றங்களின் துவக்கமாக கேப்டன் மாற்றப்படுவதாக அந்த அணி அறிவித்தது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…