பெங்களூருவில் நடைபெற்று வரும் துலீப் கோப்பை போட்டியில் இந்தியா ஏ மற்றும் இந்தியா பி அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்தியா பி அணி துவக்கத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பிறகு எட்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த முஷீர் கான், தனது அணியை சரிவில் இருந்து மீட்டார். இவருடன் ஆடிய நவ்தீப் சைனி தனது விக்கெட்டை பறிக்கொடுக்காமல் ஆடினார்.
இதன் காரணமாக இந்தியா பி அணிக்கு முஷீர் – சைனி ஜோடி எட்டாவது விக்கெட்டுக்கு அதிக ரன்களை குவித்து சாதனை படைத்தது. இதே இன்னிங்ஸில் முஷீர் கான் சிறப்பாக ஆடி 181 ரன்களை குவித்தார். 373 பந்துகளை எதிர்கொண்ட முஷீர் கான் 16 பவுண்டரிகள், 5 சிக்சர்களுடன் இந்த ரன்களை எடுத்தார். இதன் மூலம் துலீப் கோப்பை தொடரின் அறிமுக போட்டியில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் முஷீர் கான் சாதனை படைத்துள்ளார்.
துலீப் கோப்பை தொடரின் அறிமுக போட்டியிலேயே அதிக ரன்களை அடித்தவர்கள் பட்டியலில் முஷீர் கான் தற்போது மூன்றாவது இடத்தில் உள்ளார். முதல் இரு இடங்களில் பாபா அபரஜித் மற்றும் யாஷ் தல் ஆகியோர் உள்ளனர். சர்வதேச கிரிக்கெட்டில் லெஜண்ட் வீரரான சச்சின் டெண்டுல்கர் துலீப் கோப்பை அறிமுக போட்டியில் 159 ரன்களை அடித்து இருந்தார்.
தற்போதைய துலீப் கோப்பை தொடரின் அறிமுக போட்டியில் முஷீர் கான் 181 ரன்களை அடித்து சச்சின் டெண்டுல்கர் சாதனையை முறியடித்துள்ளார். அறிமுக போட்டியில் சிறப்பாக ஆடியதோடு, சரிவில் இருந்த தனது அணியை மீட்டது முஷீர் கானுக்கு பாராட்டுக்களை பெற்று தந்துள்ளது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…