Cricket
அவர் அணியில் இருப்பது சந்தேகம் தான்.. ஜெய் ஷா
இந்திய அணியின் வலதுகை வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ் தேசிய கிரிக்கெட் அகாடமியில் சிகிச்சைக்கு பிந்தைய உடல்நல பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரில் நான்கே போட்டிகளில் விளையாடிய மயங்க் யாதவ், அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இந்த நான்கு போட்டிகளில் ஏழு விக்கெட்டுகளை கைப்பற்றிய மயங்க் யாதவ் எகனாமி 6.99 ஆக இருந்தது.
மிக எளிதில் 150 கிலோமீட்டர்கள் வேகத்தில் பந்துவீசும் திறன் கொண்டிருக்கும் மயங்க் யாதவ், அதிகபட்சமாக 156.7 கிலோமீட்டர்கள் வேகத்தில் பந்துவீசி அசத்தினார். இந்திய அணியில் மயங்க் யாதவ் இடம்பிடிப்பது தொடர்பான கேள்விக்கு பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா பதில் அளித்துள்ளார். அப்போது மயங்க் யாதவ் அணியில் இடம்பிடிப்பது சந்தேகம் தான் என்று தெரிவித்தார்.
“மயங்க் யாதவ் அணியில் இடம்பிடிப்பது குறித்து என்னால் எந்த பதிலும் வழங்க முடியாது. அவர் அணியில் இடம்பிடிப்பாரா, இல்லையா என்பது பற்றி உறுதியாக எதுவும் கூற முடியாது. ஆனால், அவர் நல்ல வேகப்பந்து வீச்சாளர். நாங்கள் அவரை எதிர்பார்க்கிறோம். அவர் தற்போது தேசிய கிரிக்கெட் அகாடமியில் உள்ளார்,” என்று ஜெய் ஷா தெரிவித்தார்.
இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் களமிறங்கிய மயங்க் யாதவ் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக களமிறங்கினார். எனினும், சில போட்டிகளில் மட்டும் விளையாடிய மயங்க் யாதவ் காயம் காரணமாக விலக வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டார்.
டி20 கிரிக்கெட்டில் 14 போட்டிகளில் விளையாடி உள்ள மயங்க் யாதவ் 19 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 17 போட்டிகளில் களமிறங்கிய மயங்க் யாதவ் 34 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார்.