Connect with us

Cricket

இந்திய அணியில் இப்போ தரமான ஸ்பின்னர்களே இல்ல.. சர்ச்சையை கிளப்பிய சேவாக்

Published

on

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் துவக்க வீரர் விரேந்திர சேவாக். துவக்க வீரரான சேவாக், எதிரணி பந்துவீச்சை முதல் பந்தில் இருந்தே அடித்து ஆடுவதில் புகழ்பெற்றிருந்தார். அவ்வப்போது சேவாக் கூறும் கருத்துக்கள் பேசு பொருளாகும்.

அந்த வகையில், இந்திய அணியில் தற்போது தரமான சுழற்பந்து வீச்சாளர்கள் இல்லை என்று விரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார். சமீபத்திய இந்திய அணி வீரர்கள் சுழற்பந்து வீச்சை எதிர்கொண்டு பேட் செய்வதில் அதிக சிரமப்படுகிறார்கள். இதன் காரணமாகவே இந்திய அணி இலங்கை சுற்றுப் பயணத்தின் போது ஒருநாள் கிரிக்கெட் தொடரில் தோல்வியை தழுவியது.

இந்திய அணியில் தற்போதைய டாப் ஆர்டர் பேட்டர்களின் தற்போதைய நிலை குறித்து பேசிய விரேந்திர சேவாக், தோல்விக்கான காரணங்கள் இவைகளாக இருக்கலாம் என்று தெரிவித்தார்.

அப்போது, “வெள்ளை பந்து கிரிக்கெட் அதிகமாகும் போது, சுழற்பந்து வீச்சாளர்கள் எண்ணிக்கை வெகுவாக குறையும். டி20 கிரிக்கெட்டில் சுழற்பந்து வீச்சாளர்கள் 24 பந்துகளை மட்டுமே வீசுவார்கள். இதனால் பந்தை சுழல செய்வது, சரியாக வீசுவது என பல சவால்களை எதிர்கொள்வர். இதன் காரணமாக அவர்களால் பேட்டர்களை அவுட் செய்யும் திறனை வளர்த்துக் கொள்வது கடிமாகும். இதுவும் ஒரு காரணமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.”

“இந்திய வீரர்களும் குறைந்த அளவிலேயே உள்ளூர் கிரிக்கெட் விளையாடுகின்றனர். உள்ளூர் கிரிக்கெட்டில் அதிகளவு சுழற்பந்து வீச்சை எதிர்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். இதுவும் காரணமாக இருக்கும். மேலும் பந்தை வீசி, விக்கெட்டுகளை எடுக்கும் திறன் கொண்ட தரமான சுழற்பந்து வீச்சாளர்களே இந்திய அணியில் தற்போது இல்லை என்று நினைக்கிறேன்,” என்று தெரிவித்தார்.

google news