இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா காயம் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக விளையாடாமல் இருந்த நிலையில், தற்போது காயங்கள் அனைத்தும் சரியாகி பயிற்சி எடுத்து வருகிறார். அவர் பயிற்சி செய்யும் வீடியோவும் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாவது வழக்கமான ஒன்று. அந்த வீடியோவை பார்க்கும் பலரும் ஜஸ்பிரித் பும்ரா எப்போது கம்பேக் கொடுப்பீங்க என்பது போல தான் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
இந்த நிலையில், ரசிகர்களை உற்சாக படுத்தும் வகையில், புதிய தகவல் ஒன்று தற்போது கிடைத்துள்ளது. அது என்னவென்றால், ஜஸ்பிரித் பும்ரா காயங்கள் குணமாகி பழையபடி மின்னல் வேகத்தில் பந்து வீச பயிற்சி பெற்று வரும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோ பும்ரா இந்திய அணிக்காக வரவிருக்கும் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவார் என்ற நம்பிக்கையைத் தூண்டியுள்ளது.
விரைவில் அயர்லாந்தில் நடக்கவிருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் போது பும்ரா மீண்டும் வரக்கூடும் என்பதால், எதிர்பார்த்ததை விட அதற்கு முன்னதாகவே விரைவில் பும்ரா அணியில் சேர்ந்து விளையாட வாய்ப்புக்கள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பும்ரா ஒரு நாளைக்கு சுமார் 8-10 ஓவர்களை வீசி பயிற்சி எடுத்து வருகிறாராம்.
மேலும், பும்ரா குறித்து பிசிசிஐ நிர்வாகி ஒருவர் பேசியதாவது ” பும்ரா முன்பை விட அருமையாக பந்து வீச ஆரம்பித்துள்ளார். முன்பை விட அதிக நேரம் பயிற்சி எடுத்துக் கொண்டு வருகிறார். அதன் காரணமாக அவர் அடுத்த சில வாரங்களிலேயே எம் சிவில் நடைபெறவுள்ள இரண்டு பயிற்சி போட்டிகளில் விளையாட அதிக வாய்ப்புகள் உள்ளது. அதில் அவருடைய பிட்னஸ்பற்றி நாங்கள் கணக்கெடுக்கஉள்ளோம்” என கூறி உள்ளார்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…