இந்திய கிரிக்கெட் வீரர்கள் எப்போதுமே மிகவும் ஒற்றுமையாக இருப்பவர்கள் என்பது நாம் சொல்லி தான் தெரிய வேண்டிய அவசியமே இல்லை போட்டி நடைபெறும் போது போட்டி முடிந்த பிறகு அவர்கள் செய்யும் சில நகைச்சுவையான சம்பவங்கள் பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியூட்டும்விதமாக இருக்கும் . அதற்கான புகைப்படங்களும், வீடியோக்களும் அடிக்கடி இணையத்தில் வெளியாகி வைரலாவது உண்டு.
குறிப்பாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி விளையாடாத நிலையில், அவர் கையில் கூல்ட்ரிங்ஸ் பாட்டிலை கொண்டு சென்ற புகைப்படம் நேற்று வைரலானது. அதனை தொடர்ந்து தற்போது ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ரோஹித் ஷர்மா யுஸ்வேந்திர சாஹல்லை பின்னாடி இருந்து அடிக்கிறார்.
நகைச்சுவையாக விளையாட்டிற்கு அவர் அடித்தாலும் யுஸ்வேந்திர சாஹல் மிகவும் மெலிந்த தோற்றத்தில் இருப்பதால் அவருக்கு மிகவும் வலித்தது வீடியோவில் தெரிகிறது . இந்த வீடியோவை பார்த்த பலரும் ஐயோ என்னா அடி என வேறு வேறு ஆடியோக்களை வைத்து எடிட் செய்து கலாய்த்து வருகின்றனர்.
இதே போல பேட்டிங் செய்ய கிளம்பிய ஜடேஜாவிடம் யுஸ்வேந்திர சாஹல் ஏதோ கூற அதற்கு அதற்கு ஜடேஜா பாசத்துடன் யுஸ்வேந்திர சாஹல் கன்னத்தை பிடித்துக் கொண்டு பேட்டிங் செய்ய செல்கிறார். இந்த இரண்டு வீடியோவும் தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
மேலும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றுள்ள நிலையில் இந்த ஒரு நாள் தொடர் 1/1 என்ற கணக்கில் உள்ளது. நாளை நடைபெறும் போட்டியில் இந்தியா அல்லது வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றால் தான் ஒரு நாள் தொடரை எதாவது ஒரு அணி கைப்பற்ற முடியும் எனவே இரண்டு அணியில் எந்த அணி வெற்றி பெறப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…