டி20 உலகக் கோப்பையின் சூப்பர் 8 சுற்றுக்கு குரூப் ஏ-வில் இருந்து இந்தியாவை அடுத்து அமெரிக்கா தகுதிபெற்ற நிலையில் பாகிஸ்தான் வெளியேறியது.
அமெரிக்கா – வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்றும் டி20 உலகக் கோப்பை தொடர் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்திருக்கிறது. தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா, ஆஃப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதிபெற்ற நிலையில், அமெரிக்கா – அயர்லாந்து இடையிலான லீக் போட்டி ஃபுளோரிடாவில் நேற்று நடைபெற இருந்தது.
இந்தப் போட்டியில் அமெரிக்கா தோல்வியடைந்தால் மட்டுமே பாகிஸ்தானால் அடுத்த சுற்றுக்குப் போக முடியும் என்கிற நிலை. ஆனால், அமெரிக்கா – அயர்லாந்து போட்டி மழையால் ஒரு பந்துகூட வீசப்படாத நிலையில் கைவிடப்பட்டது. இதனால், குரூப் ஏ-வில் இந்தியாவைத் தொடர்ந்து அமெரிக்கா இரண்டாவது அணியாக சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதிபெற்றது.
ஏற்கனவே நியூசிலாந்து வெளியேறியிருந்த நிலையில், 2022 ஃபைனலிஸ்டான பாகிஸ்தானும் லீக் சுற்றோடு வெளியேறியிருக்கிறது. கடந்த 2022 டி20 உலகக் கோப்பை தொடரிலிருந்து இந்திய அணி வெளியேறியபோது, அடிலெய்டு – மும்பை விமான டிக்கெட் மாதிரியைப் பகிர்ந்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய ட்விட்டர் ஹேண்டிலில் `Bye Bye India; Have a safe Flight’ என்ற வாசகத்தோடு சீண்டல் பதிவு இடப்பட்டிருந்தது. அந்த ட்வீட்டை இப்போது பகிர்ந்து பாகிஸ்தானுக்கு `Bye Bye’ சொல்லி வருகிறார்கள் இந்திய ரசிகர்கள்!
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…