Connect with us

Cricket

ஊதிய குறைப்பு, ஒப்பந்தம் பரிசீலனை.. பரிதவிப்பில் பாக். வீரர்கள்.. வெளியான அதிர்ச்சி தகவல்

Published

on

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இத்தனை டுவிஸ்ட் சம்பவங்களை வழங்கும் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். முதல் போட்டியில் இருந்தே, யாரும் எதிர்பாராத சம்பவங்கள் அரங்கேற தொடங்கின. நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி மோசமான செயல்பாடு காரணமாக லீக் சுற்று முடிவிலேயே தொடரில் இருந்து வெளியேறியது.

இந்த தொடரின் முதல் போட்டியில் அமெரிக்க அணியை எதிர்கொண்ட பாகிஸ்தான் சூப்பர் ஓவரில் தோல்வி அடைந்தது. அமெரிக்க அணி சூப்பர் ஓவரில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி வரலாற்று வெற்றியை பதிவு செய்தது. இதைத் தொடர்ந்து இந்திய அணியை எதிர்கொண்ட பாகிஸ்தான் அணி, அந்த போட்டியிலும் இந்தியாவிடம் தோல்வியை தழுவியது. மூன்றாவது போட்டியில் கனடாவை எதிர்கொண்ட பாகிஸ்தான் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியை தழுவியதால், தொடரின் அடுத்து சுற்றுக்கு முன்னேற முடியாமல் பாகிஸ்தான் வெளியேறியது. பாகிஸ்தான் அணியின் மோசமான செயல்பாடு குறித்து, அந்நாட்டு ரசிகர்கள், முன்னாள் வீரர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், பாகிஸ்தான் வீரர்களின் சம்பளத்தை குறைப்பது, அவர்களின் ஒப்பந்த காலத்தை பரிசீலனை செய்வது போன்ற நடவடிக்கைகளில் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் ஈடுபட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரி ஒருவர் கொடுத்த தகவல்களில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் அணியின் மோசமான செயல்பாடு விவகாரத்தில் கடுமையாக நடக்க விரும்பினால், வீரர்களின் ஒப்பந்த காலத்தை தொடர்வது பற்றி பரிசீலனை செய்வது, வீரர்களின் ஊதியத்தை குறைப்பது, போட்டிகளுக்கான கட்டணத்தை குறைப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடலாம், என்று தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில் இதுவரை எந்த விதமான இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை. இது தொடர்பாக கிரிக்கெட் வாரிய தலைவர் மற்றும் அதன் உறுப்பினர்கள் இடையிலான பேச்சுவார்த்தை நடைபெற்றதாக அவர் மேலும் தெரிவித்தார்.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *