Connect with us

Cricket

கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறை.. அபார சாதனை படைத்த KKR வீரர்

Published

on

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று காலை நடைபெற்ற போட்டியில் ஓமன் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றதன் மூலம் இங்கிலாந்து அணி தனது சூப்பர் 8 கனவுகளை எட்டி பார்க்கும் தூரத்தில் உள்ளது.

தான் விளையாடிய முதல் இரண்டு போட்டிகளில் இங்கிலாந்து அணி ஒரு புள்ளியை மட்டுமே பெற்றது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் தோல்வியை தழுவிய இங்கிலாந்து, ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.

இதையடுத்து தொடரில் தொடர்ந்து விளையாட இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இங்கிலாந்து அணி களமிறங்கியது. சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் இங்கிலாந்து அணி அபாரமான வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் முதலில் பேட் செய்த ஓமன் 47 ரன்களில் ஆட்டமிழந்தது. அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 3.1 ஓவர்களில் இலக்கை துரத்தி வெற்றி பெற்றது.

இங்கிலாந்து அணியின் துவக்க வீரர் பில் சால்ட் இந்த இன்னிங்ஸில் தான் எதிர்கொண்ட முதல் இரண்டு பந்துகளை சிக்சராக மாற்றினார். சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸின் முதல் இரண்டு பந்துகளை சிக்ஸ்-க்கு பறக்க விட்ட முதல் வீரர் என்ற பெருமையை பில் சால்ட் பெற்றார்.

துவக்கத்திலேயே இரண்டு சிக்ஸ் அடித்த பில் சால்ட் அடுத்த பந்திலேயே அவுட் ஆகி வெளியேறினார். இந்த போட்டியில் அதிரடி வெற்றி பெற்றதன் மூலம் இங்கிலாந்து அணியின் நெட் ரன்ரேட் (+3.081) ஆக மாறியது.

இதையடுத்து க்ரூப் பி பிரிவில் இடம்பெற்றுள்ள இங்கிலாந்து அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.

google news