உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், 2023 ஒருநாள் உலகக் கோப்பை தொடர் என ஐசிசி கோப்பை தொடர்களில் இந்திய அணி தொடர்ந்து தோல்வியை சந்தித்து வந்தது. ஐசிசி கோப்பையை வெல்லும் இந்திய அணியின் கனவு நீண்டு கொண்டே இருந்தது.
அந்த வரிசையில், ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கோப்பை வெல்ல வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களிடமும் இருந்து வந்தது.
இந்த எதிர்பார்ப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், டி20 உலகக் கோப்பையை இந்திய அணி 17 ஆண்டுகளுக்கு பிறகு வென்றது. தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் இந்திய அணி திரில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.
உலகக் கோப்பை வெற்றியுடன் டி20 உலகக் கோப்பை போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, கேப்டன் ரோகித் சர்மா மற்றும் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் அறிவித்தனர்.
இவர்கள் மட்டுமின்றி இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் டி20 உலகக் கோப்பை தொடருடன் ஓய்வு பெறுகிறார். அந்த வகையில், இந்த கோப்பையை வென்றதில் பல்வேறு எமோஷனல் கதைகள் அடங்கியுள்ளன.
உலகக் கோப்பை வெற்றி குறித்து ராகுல் டிராவிட் நெகிழந்து பேசினார். முன்னதாக, போட்டி முடிந்த பிறகு இந்திய அணியின் டிரெசிங் ரூமில் உரையாற்றிய ராகுல் டிராவிட் தனக்கு வந்த நவம்பர் போன் கால் பற்றி தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், மும்பை வான்கடே மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற பாராட்டு விழாவில் அந்த போன் கால் பற்றிய கேள்விக்கு ராகுல் டிராவிட் பதில் அளித்தார். அப்போது பேசிய அவர், 50 ஓவர் உலகக் கோப்பைக்கு பிறகு தொடர்வதில் அதிக உறுதியாக நான் இருக்கவில்லை. உலகக் கோப்பை தொடர் சிறப்பாகவே முடிந்த போதிலும், இந்திய அணி அந்த கோட்டை கடக்க முடியாமல் போனதில் அதிக ஏமாற்றங்கள் நிரம்பி இருந்தது.
அப்போது தான் ரோகித் சர்மா என்னை போனில் தொடர்பு கொண்டார். அப்போது இன்னும் 6-இல் இருந்து 8 மாதங்கள் வரை நேரம் உள்ளது. நாம் இருவரும் இணைந்து இதனை வெற்றிகரமாக நிறைவுசெய்தால் அருமையாக இருக்கும் என்று தெரிவித்தார். தற்போது என் வாழ்நாளில் மிகமுக்கிய போன் காலாக அது எப்போதும் இருக்கும்.
இந்த அன்பை நான் இழப்பேன். இன்று இங்கு நாங்கள் பார்த்தவை மிகவும் அலப்பறியது. ரசிகர்கள் மற்றும் பொது மக்கள் இந்த போட்டியின் மீது வைத்த மதிப்பு தான், இந்த போட்டி இப்படி இருக்க முக்கிய காரணம். நாங்கள் உண்மையில் உங்களுக்கு கடமைப்பட்டுள்ளோம், என்று தெரிவித்தார்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…