Categories: Cricket

உங்க பயோபிக்-ல யார் நடிக்கனும்? செம டைமிங்-ல ராகுல் டிராவிட் கொடுத்த பதில்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், திரைப்படங்களில் நடிப்பது பற்றி பதில் அளித்துள்ளார். இந்திய கிரிக்கெட்டில் தலைசிறந்த பேட்டர், ரசிகர்கள் மத்தியிலும் சர்வதேச கிரிக்கெட் அரங்கிலும் நன்மதிப்பை பெற்ற வீரராக ராகுல் டிராவிட் உள்ளார். எனினும், இவர் காலக்கட்டத்தில் ஒருமுறை கூட உலகக் கோப்பையை ஏந்தவில்லை என்ற குறை நீண்ட காலம் நீடித்து வந்தது.

இந்த நிலையில், சமீபத்திய டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்திய இந்திய அணி டி20 உலகக் கோப்பை வென்றது. இதன் மூலம் ஐசிசி கோப்பையை வெல்ல வேண்டும் என்ற 11 ஆண்டுகால ஏக்கம் முடிவுக்கு வந்தது. கோப்பையை வென்ற இந்திய அணி, அதனை அப்போதைய தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்-இடம் கொடுத்து அழகு பார்த்தது. மேலும், ராகுல் டிராவிட் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியை வெற்றியோடு நிறைவு செய்து கொண்டார்.

சமீபத்தில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட ராகுல் டிராவிட் தனது பயோபிக் திரைப்படத்தில் எந்த நடிகர் நடிக்க வேண்டும் என்ற கேள்விக்கு பதில் அளித்தார். கேள்வி கேட்கப்பட்டதும், ராகுல் டிராவிட் தயக்கமின்றி டைமிங்கில் கொடுத்த பதில் தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகறது.

அதன்படி, “நல்ல பணம் கொடுக்கிறார்கள் என்றால், அந்த கதாபாத்திரத்தில் நானே நடித்துவிடுவேன்,” என்று கூறி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். இதைத் தொடர்ந்து ஒருநாள் உலகக் கோப்பை தொடர் மற்றும் டி20 உலகக் கோப்பை தொடர் இடையில் என்னென்ன மாற்றங்கள் நடைபெற்றன என்ற கேள்விக்கு ராகுல் டிராவிட் பதில் அளித்தார்.

அப்போது, “உண்மையில், வித்தியாசமாக எதையும் மாற்ற நான் விரும்பவில்லை. ஒருநாள் உலகக் கோப்பை தொடர் மிகவும் சிறப்பாகவே அமைந்தது. ரோகித் தலைமையிலான அணியில் ஒவ்வொருத்தரும் மிகச்சிறப்பாக செயல்பட்டனர். எங்களுக்கு அந்த தொடர் அருமையாக அமைந்தது.”

“தயார்படுத்திக் கொள்வது, திட்டமிடல் மற்றும் அதனை செயல்படுத்துவது என எதிலும் எங்களால் அதைவிட மேலோங்கி செயல்பட்டிருக்க முடியாது. தொடர்ச்சியாக பத்து போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தி வெற்றி பெறுவதற்கு ஏற்ற அனைத்தையும் செய்தோம். நான் எதையும் மாற்ற நினைக்கவில்லை. எங்களது குழுவுடன் ஆலோசிக்கும் போது என்ன செய்யலாம் என்ற கேள்வி எழுந்தது.”

“அத்தகைய கேள்விக்கு நாங்கள் அப்போது செய்த எல்லாவற்றையும், மீண்டும் செய்வது சரியாக இருக்கும் என்று ஒருமனதாக முடிவு எடுத்தோம். நாங்கள் அதே சக்தியை உருவாக்கி, அதே வைபை உருவாக்கி அப்போதிருந்த அணி சூழலை உருவாக்க நினைத்தோம். அன்றைய தினம் எங்களுக்கு சிறிதளவு அதிர்ஷ்டம் கிட்டும் என்று நம்பினோம்,” என்று தெரிவித்தார்.

Web Desk

Recent Posts

5 ஓவரில் 120 ரன்கள்.. இந்தியாவுக்கு ஷாக் கொடுத்த பாகிஸ்தான் – இது எப்ப நடந்தது?

ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…

3 weeks ago

விஷயம் டாப் சீக்ரெட், ரகசிய மீட்டிங்.. CSK-ல் ரிஷப் பண்ட்.. முன்னாள் வீரர் ஓபன் டாக்!

இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…

3 weeks ago

நான் இருக்கேன்…மீண்டும் நிரூபித்துள்ள ரவீந்திர ஜடேஜா…

இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…

3 weeks ago

குப்பைகளுக்கு குட்-பை சொன்ன சென்னை மாநகராட்சி…ஒரே நாள்ல இவ்ளோவா?…

பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…

3 weeks ago

நழுவ நினைத்த நாகேஷ்…கெளரவப்படுதிய எம்.ஜி.ஆர்…நடந்தது என்ன தெரியுமா?…

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…

3 weeks ago

சாம்பியன் தான் இருந்தாலும் இவங்க மட்டும் போதும்…கோல்கத்தா அணி எடுத்த முடிவு…

ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…

3 weeks ago