இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்து வந்த ராகுல் டிராவிட், நடைபெற்று முடிந்த டி20 உலகக் கோப்பை தொடருடன் வெற்றிகரமாக விடைபெற்றுக் கொண்டார். இதைத் தொடர்ந்து ராகுல் டிராவிட் வாழ்க்கையில் தனது அடுத்த பயணத்திற்கு தயாராகி வருகிறார். 2024 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நிறைவு பெற்றதில் இருந்து, ராகுல் டிராவிட் ஐபிஎல் அணிகளில் இணைவது தொடர்பாக ஏராளமான தகவல்கள் வெளியாகி வருகின்றன.
அந்த வரிசையில் வெளியான தகவல் ஒன்று ராகுல் டிராவிட் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளராக இணைய இருப்பதாக கூறியது. ஏற்கனவே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராக இருந்த கவுதம் கம்பீர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்ற நிலையில், ராகுல் டிராவிட் கொல்கத்தா அணியில் இணையலாம் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் ராகுல் டிராவிட் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. “ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராகுல் டிராவிட் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில், இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும்,” என்று தகவல் ஒன்று கூறியதாக தனியார் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னதாக இலங்கை அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்க இந்தியாவில் இருந்து இலங்கை புறப்படும் முன் பேசிய கவுதம் கம்பீர், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் செய்த காரியங்களை மனதில் வைத்து, பயிற்சியாளராக மிகப்பெரிய இடத்தை பூர்த்தி செய்ய வேண்டிய இடத்தில் இருப்பதாக தெரிவித்து இருந்தார்.
2024 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியை இந்தியா தோற்கடித்து, கோப்பையை வென்றது. டி20 உலகக் கோப்பை வெற்றிக்கு பின் பேசிய ராகுல் டிராவிட், அடுத்த மாதம் துவங்கி எனக்கு வேலையில்லை, உங்களுக்கு ஏதேனும் வேலைவாய்ப்பு பற்றி தகவல் தெரிந்தால் எனக்கு தெரிவியுங்கள் என்று நக்கலாக தெரிவித்து இருந்தார்.
இந்திய கிரிக்கெட்டில் அலாதியான அனுபவம் மிக்கவர் டிராவிட். இதுதவிர இந்திய கிரிக்கெட்டில் இவரது அனுபவம் பல சாதனைகளை படைத்துள்ளது. இதன் காரணமாக பல ஐபிஎல் அணிகள் ராகுல் டிராவிட்-ஐ தங்களது அணியில் சேர்த்துக் கொள்ள முயற்சிப்பதாக தெரிகிறது.
பத்து மாதங்கள் பயணத்திலேயே இருப்பது, குடும்பத்தை பிரிந்து இருப்பது உள்ளிட்டவைகளை கருத்தில் கொண்டு ராகுல் டிராவிட் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக தொடர்வதில் விருப்பம் இல்லை என்று தெரிவித்துவிட்டார். எனினும், ஐபிஎல் தொடர் முற்றிலும் வித்தியாசமான ஒன்று. இதில் ராகுல் டிராவிட் ஆண்டுக்கு இரண்டு அல்லது மூன்று மாதங்கள் வரை அணியுடன் இருந்தாலே போதுமானது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…