Categories: Cricketworld cup

பயிற்சியாளராக ராகுல் டிராவிட் பேசிய கடைசி வார்த்தைகள்..

டி20 உலகக் கோப்பை தொடரோடு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஓய்வு பெறுகிறார். டிராவிட் வழிகாட்டுதலில் இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வென்று அசத்தியது. இதைத் தொடர்ந்து இந்திய அணிக்கு இன்றுவரை பாராட்டு மழை பொழிகிறது.

இந்திய ரசிகர்கள் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டி உள்பட சுவாரஸ்ய சம்பவபங்களை இன்றும் மீம்ஸ், வீடியோ வடிவில் பகிர்ந்து கொண்டே தான் வருகின்றனர். இந்த நிலையில், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் இந்திய அணியின் டிரெசிங் ரூமில் நிகழ்த்திய கடைசி உரை தொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது.

அதில் பேசிய ராகுல் டிராவிட், பேசுவதற்கு என்னிடம் அதிக வார்த்தைகள் இல்லை. நான் கூற விரும்புவது, எனக்கு இத்தகைய மறக்கமுடியாத நினைவை வழங்கிய அனைவருக்கும் நன்றி மட்டும் தான். இந்த நினைவுகளை நீங்கள் அனைவரும் மறக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். நான் எப்போதும் கூறுவதை போன்று, ரன் அல்லது விக்கெட்டுகளை தாண்டி உங்களது கிரிக்கெட் வாழ்க்கையில் இதனை ஒரு அழகிய நினைவாக நீங்கள் வைத்திருக்க முடியும்.

அந்த வகையில் இதனை கொண்டாடுங்கள். இதைவிட உங்களை நினைத்து நான் வேறெதிலும் அதிகமாக பெருமை கொள்ள முடியாது. நீங்கள் என்ன செய்தீர்கள் என்ற விஷயத்திற்கு வரும் போது, நீங்கள் போட்டியிட்ட விதம், நாம் ஒரு அணியாக பணியாற்றி இருக்கிறோம். சில முறை நெருக்கத்திற்கு வந்து கோட்டை தவறவிட்டு இருக்கிறோம். அந்த வகையில், நாம் சில ஏமாற்றங்களையும் சந்தித்து இருக்கிறோம்.

ஆனால், இன்று நீங்கள் செய்திருக்கும் காரியம், உதவியாளர் குழு மேற்கொண்டுள்ள பணிகள், அனைவரின் கடின உழைப்பு, தியாகம் உள்ளிட்டவைகளை நினைத்து ஒட்டுமொத்த நாடே பெருமை கொள்ளும். இதேபோன்று நீங்கள் அனைவரும் பெருமை கொள்ள வேண்டும்.

இதுபோன்ற ஒரு நாளில், இதில் ஒரு அங்கமாக நான் இருப்பதற்கு நான் வேறு எந்த வகையிலும் கடமைப்பட்டிருக்க முடியாது. நீங்கள் அனைவரும் என்னிடம் கனிவாக நடந்து கொண்டது, பயிற்சியாளர் குழு மற்றும் எனது உதவியாளர் குழுவிடம் காட்டிய ஒத்துழைப்புக்கு நான் இதைவிட நன்றியுள்ளவனாக இருக்க முடியாது. அனைவருக்கும் மிக்க நன்றிகள்.

நவம்பர் மாதம் என்னை தொடர்பு கொண்டு மீண்டும், பயிற்சியாளராக தொடர வேண்டும் என்று சொன்னதற்கு மிக்க நன்றி ரோகித். உங்கள் அனைவருடனும் பணியாற்றியதை நான் மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உணர்கிறேன். இதற்காக உங்கள் அனைவருக்கும் நன்றிகள். ரோகித் உன்னுடைய நேரத்தை வழங்கியதற்கு நன்றி. ஒரு கேப்டனாக நாம் அதிக நேரம் பேசியிருக்கிறோம். சில முறை நாம் ஒற்றுக் கொள்வோம், சில சமயங்களில் அவ்வாறு செய்ய முடியாது. ஆனால் எல்லாவற்றுக்கும் நன்றி.

உங்கள் அனைவரையும் பற்றி நன்கு அறிந்து கொண்டதில் மகிழ்ச்சி. இதை நாம் ஒரு அணியாக வென்று இருக்கிறோம். கடந்த ஒருமாத காலமாக நாம் அணியாக செயல்பட்டுள்ளோம். இது தனிநபர் உழைப்பை தாண்டி, அணியின் முயற்சி ஆகும். அனைவருக்கும் நன்றிகள். இதைவிட அதிகம் பெருமை கொள்ள முடியாது. எல்லோரும் பார்டி எடுத்து, இதனை கொண்டாடுவோம்.

அணியை கடந்து, வெற்றிகரமான நிர்வாகத் திறன் நமது பயணத்தில் குறிப்பிடத்தக்க அங்கமாக இருந்துள்ளது. பிசிசிஐ நமக்காக பின்னணியில் ஏராளமான பணிகளை மேற்கொண்டு வந்துள்ளது. நாம் அனைவரும் ஒரு சிஸ்டத்தின் கீழ் இயங்குகிறோம். இத்தகைய நிர்வாகம் தான் நாம் விளையாடவும், வளர்ச்சி அடையவும் வாய்ப்பை அளிக்கிறது. அனைவருக்கும் நன்றி, என்று தெரிவித்தார்.

Web Desk

Recent Posts

5 ஓவரில் 120 ரன்கள்.. இந்தியாவுக்கு ஷாக் கொடுத்த பாகிஸ்தான் – இது எப்ப நடந்தது?

ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…

3 weeks ago

விஷயம் டாப் சீக்ரெட், ரகசிய மீட்டிங்.. CSK-ல் ரிஷப் பண்ட்.. முன்னாள் வீரர் ஓபன் டாக்!

இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…

3 weeks ago

நான் இருக்கேன்…மீண்டும் நிரூபித்துள்ள ரவீந்திர ஜடேஜா…

இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…

3 weeks ago

குப்பைகளுக்கு குட்-பை சொன்ன சென்னை மாநகராட்சி…ஒரே நாள்ல இவ்ளோவா?…

பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…

3 weeks ago

நழுவ நினைத்த நாகேஷ்…கெளரவப்படுதிய எம்.ஜி.ஆர்…நடந்தது என்ன தெரியுமா?…

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…

3 weeks ago

சாம்பியன் தான் இருந்தாலும் இவங்க மட்டும் போதும்…கோல்கத்தா அணி எடுத்த முடிவு…

ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…

3 weeks ago