டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 8 சுற்றின் கடைசி போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் வங்காளதேசம் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 115 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதையடுத்து களமிறங்கிய வங்காளதேசம் அணி 116 எனும் எளிய இலக்கையே துரத்தியது.
இந்த போட்டியில் வெற்றி பெற்றால் அரையிறுதிக்கு முன்னேறலாம் என்ற கனவோடு வந்த ஆப்கானிஸ்தான் ஆட்டத்தின் இரண்டாம் பாதியில் சிறப்பாகவே பந்துவீசியது. வங்காளதேசம் அணி துவக்கம் முதலே விக்கெட்டுகளை பறிகொடுத்து வந்தது.
இந்த போட்டியில் வங்காளதேசம் வெற்றி பெற்றால் அந்த அணியும் அரையிறுதிக்கு முன்னேறலாம் என்ற நிலை இருந்தது. எனினும், வங்காளதேசம் அணி 12.4 ஓவர்களில் வெற்றி இலக்கை அடைய வேண்டும்.
இதன் காரணமாக போட்டியில் துவக்கம் முதலே பரபர சூழல் நிலவி வந்தது. வங்காளதேசம் சார்பில் துவக்க வீரரான லிட்டன் தாஸ் கடைசி வரை களத்தில் இருந்தார். இவரை தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து நடையை கட்டினர். போட்டியின் போது மழை குறுக்கிட்டால் ஆப்கானிஸ்தான் அரையிறுதி சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நிலை உருவானது.
அப்போது மழையை எதிர்பார்த்து, போட்டியை தாமதப்படுத்துவது போன்று ஆப்கானிஸ்தான் தலைமை பயிற்சியாளர் ஜொனாதன் டிராட் வீரர்களிடம் பொறுமையை கையாளுமாறு செய்கை காட்டினார். இதை பார்த்த ஆப்கன் வீரர் குலாப்தீன் நையிப், சட்டென தரையில் விழுந்து தனது காலின் தொடை பகுதியை பிடித்தவாரு துடிக்க துவங்கினார்.
இதையடுத்து களத்தில் இருந்து வெளியேறிய நையிப், பிறகு சில நிமிடங்கள் கழித்து மீண்டும் களத்திற்கு வந்தார். இதோடு, பந்துவீசி விக்கெட் வீழ்த்தவும் செய்தார். இவரது இந்த செயல் உலகம் முழுக்க கிரிக்கெட் ரசிகர்கள், போட்டியில் கமெண்ட் செய்வோர், முன்னாள் வீரர்கள் என பலதரப்பினரின் கவனத்தை ஈர்த்தது. பலரும் நயிப் வேண்டுமென்றே காயம் ஏற்பட்டது போல் நடிக்கிறார் என்றும் தெரிவித்தனர்.
இந்த நிலையில் இன்றைய போட்டியில் குலாப்தீன் நையிப்-க்கு என்ன ஆனது என்பது பற்றி அணியின் கேப்டன் ரஷித் கான் மனம் திறந்தார். இது குறித்து பேசிய அவர், அவருக்கு தசைப்பிடிப்பு ஏற்பட்டது. அவருக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை, சமூக வலைதளங்களில் என்ன நடக்கிறது என்றும் தெரியவில்லை. களத்தில் காயம் ஏற்பட்ட விவகாரத்தை பொருத்தவரை பந்துவீச்சில் நாங்கள் ஓவர்கள் எதையும் இழக்கவில்லை.
மழை காரணமாக சில நிமிடங்கள் இடைவெளி கிடைத்தது. பிறகு மீண்டும் போட்டி தொடங்கி நடைபெற்றது. இந்த சம்பவம் போட்டியில் மிகப்பெரிய மாற்றம் எதையும் ஏற்படுத்தவில்லை. சமயங்களில் சிறிய காயங்கள் ஏற்படுவதும், அவை விரைந்து குணமாவதும் இயல்பு தான். இதற்கு சிறிது நேரம் கொடுத்தாலே போதுமானது, என்றார்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…