Categories: Cricket

அஸ்வினின் ஐபிஎல் ஆல்-டைம் பிளேயிங் 11 – கேப்டன் யார் தெரியுமா?

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் ஐபிஎல் கிரிக்கெட்டில் தனது ஆல்-டைம் பிளேயிங் 11 அணியை அறிவித்து இருக்கிறார். இவரது இந்த அணியில் ஏழு இந்தியர்கள் இடம்பிடித்துள்ளனர். இந்த அணிக்கு கேப்டன் பொறுப்பை அவர் ரோகித் சர்மா, விராட் கோலி என இருவருக்கும் கொடுக்கவில்லை. மேலும் இந்த பட்டியலில் பல முன்னணி வீரர்களும் இடம்பெறவில்லை.

க்ரிஸ் கெயில், பொல்லார்ட், ஆண்ட்ரெ ரசல், கவுதம் கம்பீர் போன்ற முக்கிய வீரர்கள் இந்த அணியில் இடம்பெறவில்லை. மேலும், இந்த அணியில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து நான்கு பேரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து இருவரும் இடம்பெற்றுள்ளனர்.

அஸ்வினின் ஆல்-டைம் ஐபிஎல் பிளேயிங் 11 பட்டியல்

  1. ரோகித் சர்மா
  2. விராட் கோலி
  3. சுரேஷ் ரெய்னா
  4. சூர்யகுமார் யாதவ்
  5. ஏபி டி வில்லியர்ஸ்
  6. எம்எஸ் டோனி (விக்கெட் கீப்பர் / கேப்டன்)
  7. சுனில் நரைன்
  8. ரஷித் கான்
  9. லசித் மலிங்கா
  10. புவனேஷ்வர் குமார்
  11. ஜஸ்பிரித் பும்ரா

இந்திய அணியின் முன்னாள் வீரர் க்ரிஸ் ஸ்ரீகாந்த்-இன் யூடியூப் சேனல்- சீக்கி சீக்கா-வில் நடைபெற்ற உரையாடலின் போது ரவிசந்திரன் அஸ்வின் இந்த அணியை அறிவித்தார்.

முன்னதாக இந்திய அணி முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் மற்றொரு நிகழ்ச்சியில் பேசும் போது அறிவித்த தனது ஆல்-டைம் பிளேயிங் 11 அணியில் எம்எஸ் டோனிக்கு இடம் அளிக்காமல் விட்டது பெரும் பேசு பொருளாக மாறியது. எனினும், அஸ்வின் தனது அணியில் எம்எஸ் டோனியை தேர்வு செய்ததோடு, அவருக்கே உரிய கேப்டன் பொறுப்பும் வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Web Desk

Recent Posts

5 ஓவரில் 120 ரன்கள்.. இந்தியாவுக்கு ஷாக் கொடுத்த பாகிஸ்தான் – இது எப்ப நடந்தது?

ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…

3 weeks ago

விஷயம் டாப் சீக்ரெட், ரகசிய மீட்டிங்.. CSK-ல் ரிஷப் பண்ட்.. முன்னாள் வீரர் ஓபன் டாக்!

இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…

3 weeks ago

நான் இருக்கேன்…மீண்டும் நிரூபித்துள்ள ரவீந்திர ஜடேஜா…

இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…

3 weeks ago

குப்பைகளுக்கு குட்-பை சொன்ன சென்னை மாநகராட்சி…ஒரே நாள்ல இவ்ளோவா?…

பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…

3 weeks ago

நழுவ நினைத்த நாகேஷ்…கெளரவப்படுதிய எம்.ஜி.ஆர்…நடந்தது என்ன தெரியுமா?…

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…

3 weeks ago

சாம்பியன் தான் இருந்தாலும் இவங்க மட்டும் போதும்…கோல்கத்தா அணி எடுத்த முடிவு…

ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…

3 weeks ago