உலக கிரிக்கெட்டில் மிகவும் பிரபலமான சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவர் ரவிச்சந்திரன் அஸ்வின். ஐபிஎல் தொடரில் எம்எஸ் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாட துவங்கிய அஸ்வின், அதன்பின் பிரபல சுழற்பந்துவீச்சாளர் ஆனார். இன்றும் இந்திய டெஸ்ட் அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.
எம்எஸ் டோனி தலைமையில் விளையாடி இருக்கும் அஸ்வின் அவர் கூறிய அறிவுரையை 15 ஆண்டுகள் வரை புரிந்து கொள்ள முடியாமல் இருந்ததாக தெரிவித்துள்ளார். தனியார் நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த அஸ்வின், எம்எஸ் டோனிக்கு தன்னை ஒரு வருடம் வரை தெரியாமல் இருந்ததாக தெரிவித்தார். எனினும், டோனி தலைமையில் விளையாடிய பிறகு சக்திவாய்ந்த பச்சுவீச்சாளராக உருவெடுத்துள்ளார்.
இது குறித்து பேசிய அஸ்வின், “ஒரு வருடம் வரை டோனிக்கு என்னை தெரியாது என்றே நினைக்கிறேன். அவருக்கு தெரிந்திருக்குமா, தெரியாமல் இருந்ததா என்பது எனக்கு தெரியாது. ஆனால் அது தான் டோனி. அவரை கிட்டத்தட்ட 15 முதல் 16 ஆண்டுகள் வரை எனக்கு தெரியும். அவர் 2008-09 ஆகிய காலக்கட்டங்களில் இருந்ததை போன்றே தற்போதும் இருக்கிறார்.”
“அவர் என்னிடம் எப்போதும் கூறியது இதுமட்டும் தான். உண்மையான பலம், புதிய விஷயங்களை முயற்சிப்பதில் தான் இருக்கிறது. எப்போதும் Funky-ஆக இரு. அதை மட்டும் யாருக்காகவும் மாற்றிக் கொள்ளாதே. வித்தியாசமாக பந்துவீசுவதில் பணியாற்றுவதை மறந்துவிடாதே என்று தெரிவித்தார். அவர் பல சமயங்களில் என்னிடம் அடிக்கடி கூறிய விஷயம் ஒன்றுதான். எப்போதும் Funky-ஆக இரு, உன்னை வெளிப்படுத்து என்பது மட்டும் தான்.”
“அந்த வகையில் அவர் ஒருத்தரிடம் இருந்து கிரிக்கெட்டை தாண்டி அவர் எந்த அளவுக்கு மன உறுதியுடன் இருக்கிறார் என்பதை எம்எஸ் டோனி அதிகம் மதிப்பிடுகிறார். இதை வைத்து தான் அவர் துஷார் தேஷ்பாண்டேவை சிஎஸ்கே அணியில் தேர்வு செய்தார்,” என்று தெரிவித்தார்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…