இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இக்கட்டான சூழலில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தி அசத்தினார் ரிங்கு சிங்.
போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற 12 பந்துகளில் 9 ரன்களை எடுக்க வேண்டும் என்ற நிலையில், ரிங்கு சிங் பந்துவீச வந்தார். 19 ஆவது ஓவரை சிறப்பாக வீசிய ரிங்கு சிங் 3 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அடுத்து கடைசி ஓவரை வீசிய கேப்டன் சூர்யகுமார் யாதவ், 5 ரன்களை தடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அடுத்து சூப்பர் ஓவருக்கு சென்ற போட்டியில் இந்தியா வெற்றி பெற்று தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
போட்டியில் இக்கட்டான சூழலில் சிறப்பாக பந்துவீசிய ரிங்கு சிங் அதன்பிறகு பேசிய போது, உள்ளூர் கிரிக்கெட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் நான் பந்துவீசி விக்கெட்டுகளை எடுத்துள்ளேன் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், சூர்யகுமார் என்னிடம் இந்த சீரிசில் பந்துவீச தயாராக இருக்கும்படி கூறியிருந்தார். நானும் அதற்கான பயிற்சியில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்தேன்.
பிறகு போட்டியில் இக்கட்டான சூழல் வந்த போது, சூர்யகுமார் என்னை பந்துவீச அழைத்தார். நான் பந்துவீச ஆரம்பித்தேன். அதன்பிறகு நடந்தவை கடவுளின் திட்டம் – இரண்டு விக்கெட்டுகள் கிடைத்தன என்றார்.
டி20 தொடரை முழுமையாக கைப்பற்றியுள்ள இந்திய அணி ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. இலங்கை இந்தியா அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி நாளை நடைபெற இருக்கிறது. டி20 தொடரை போன்றே, ஒருநாள் தொடரிலும் இரு அணிகள் மூன்று போட்டிகளில் விளையாட உள்ளன.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…