இந்திய அணியின் விக்கெட் கீப்பர்-பேட்டர் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு பின் மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டில் களமிறங்க இருக்கிறார். கடந்த 2022 டிசம்பர் மாதம் வங்கதேசம் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடிய ரிஷப் பண்ட் அதன்பிறகு கார் விபத்தில் சிக்கிக் கொண்டார்.
பிறகு, நீண்ட காலம் கழித்து தற்போது மீண்டும் வங்கதேசம் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலேயே மீண்டும் கம்பேக் கொடுக்க இருக்கிறார். டெஸ்ட் அணியில் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணியின் மற்ற வகை கிரிக்கெட்டில் விளையாடிய ரிஷப் பண்ட் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட இருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இதுவரை இந்திய அணிக்காக 33 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கும் ரிஷப் பண்ட், யாரும் மறக்க முடியாத அளவுக்கு தலைசிறந்த இன்னிங்ஸை ஆடி இருக்கிறார். சமீபத்தில் தனியார் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் பேசிய ரிஷப் பண்ட், முன்னாள் இந்திய அணி தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பற்றி பேசியுள்ளார்.
“அது உண்மையில் அற்புதமான உறவு. ரவி சாஸ்திரியுடன் சிறப்பான புரிதல் எனக்கு இருந்தது. அவர் எனக்கு தேவையான சுதந்திரத்தை கொடுத்தார். குறிப்பிட்ட விஷயத்தை செய்யக்கூடாது என்று யாரேனும் என்னிடம் கூறினால் எனக்கு அது பிடிக்காது. மாறாக, இப்படி செய்யலாம் என்று யாரும் எதுவும் சொன்னால் அதை ஏற்றுக் கொள்வேன். முழுமையாக ஒரு விஷயத்தை தவிர்ப்பதற்கு பதிலாக, சிறப்பான ஆப்ஷனை எடுத்துக் கொள்வேன்.”
“ஒரு சமயத்தில் நான் ஆஃப்-ஸ்பின்னர்களிடம் எளிதில் அவுட் ஆகி வந்தேன். அப்போது என்னிடம் என்ன சொல்ல வேண்டும் என்று ரவி பாய் யோசித்துக் கொண்டிருந்தார். பிறகு, என்னிடம் அவர் கூறியது- ஆஃப் ஸ்பின்னரை எதிர்கொள்ள நாம் எதையாவது செய்ய வேண்டும். ஆஃப் ஸ்பின்னருக்கு எதிராக ஸ்வீப் ஷாட் விளையாட வேண்டும், இது டெஸ்ட் கிரிக்கெட் சார்ந்தது,” என்று தெரிவித்தார்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…