Categories: Cricket

கழட்டிவிடும் டெல்லி.. டோனி போன்று ரஜினி ஸ்டைலில் ரிஷப் பண்ட்.. ஒருவேளை இருக்குமோ?

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) ஏலம் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. உலகளவில் அதிக ரசிகர்களை கொண்ட ஐபிஎல் தொடரில், எந்தெந்த வீர்ர்கள் எந்த அணிக்காக விளையாட போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பை ஐபிஎல் ஏலம் தூண்டிவிடும்.

அந்த வகையில், இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள ஐபிஎல் ஏலத்தில் பத்து அணிகள் இடையில் மிகப்பெரிய மாற்றங்கள் நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது. இதேடு, முன்னணி வீரர்கள், நீண்ட காலம் ஒரே அணியில் இடம்பெற்ற வீரர்கள் மற்ற அணிகளுக்கு மாறுவதற்கான வாய்ப்பும் இருப்பதாக சமீப காலங்களில் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

அப்படியாக, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் 2025 ஐபிஎல் தொடரில் வேறொரு அணிக்காக விளையாட இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து வெளியான தகவல்களில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நிர்வாகம் ரிஷப் பண்ட் கேப்டன்சியில் திருப்தி அடையவில்லை என்று கூறப்படுகிறது. இதனிடையே சிஎஸ்கே அணியில் எம்எஸ் டோனி அடுத்த சீசனில் விளையாடுவாரா என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது.

கால் மூட்டு பகுதியில் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள எம்எஸ் டோனி, இந்த ஆண்டு ஐபிஎல் தொடரிலேயே கடைசி ஓவர்களில் மட்டும் களமிறங்கி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். மேலும், 2024 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகிய எம்எஸ் டோனி, கேப்டன்சி பொருப்பை ருதுராஜ் கெய்க்வாட்-க்கு வழங்கினார்.

ரிஷப் பண்ட் டெல்லி அணியில் இருந்து விலகலாம் என்ற தகவலும், சிஎஸ்கே அணியில் எம்எஸ் டோனி தொடர்வாரா என்ற கேள்வியும் ஒருசேர எழுந்துள்ளது. இந்த நிலையில், ரிஷப் பண்ட் தனது சமூக வலைதள பதிவில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்-இன் கபாலி பட புகைப்படத்துடன், அதே போன்று தான் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் பதிவிட்டு தலைப்பில் “தலைவா” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஐபிஎல் தொடரில் அணி மாற்றம் தொடர்பான தகவல்கள் தொடர்ச்சியாக வெளியாகி வரும் சூழலில், ரிஷப் பண்ட்-இன் சமூக வலைதள பதிவு அவர் 2025 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியில் இணைவார் என்பதை குறிக்கும் வகையில் இருப்பதாக சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

முன்னதாக எம்எஸ் டோனி, ரஜினிகாந்த்-இன் கபாலி பட போட்டோ ஒன்றை பதிவிட்டு, அத்துடன் அதே போசில் எடுத்துக் கொண்ட தனது புகைப்படத்தையும் பதிவிட்டார். இதற்கான தலைப்பில் அவர், “ஒரே ஒரு தலைவரின் போஸை காப்பியடிக்க முயற்சி செய்தேன்,” என்று குறிப்பிட்டு இருந்தார்.

Web Desk

Recent Posts

5 ஓவரில் 120 ரன்கள்.. இந்தியாவுக்கு ஷாக் கொடுத்த பாகிஸ்தான் – இது எப்ப நடந்தது?

ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…

3 weeks ago

விஷயம் டாப் சீக்ரெட், ரகசிய மீட்டிங்.. CSK-ல் ரிஷப் பண்ட்.. முன்னாள் வீரர் ஓபன் டாக்!

இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…

3 weeks ago

நான் இருக்கேன்…மீண்டும் நிரூபித்துள்ள ரவீந்திர ஜடேஜா…

இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…

3 weeks ago

குப்பைகளுக்கு குட்-பை சொன்ன சென்னை மாநகராட்சி…ஒரே நாள்ல இவ்ளோவா?…

பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…

3 weeks ago

நழுவ நினைத்த நாகேஷ்…கெளரவப்படுதிய எம்.ஜி.ஆர்…நடந்தது என்ன தெரியுமா?…

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…

3 weeks ago

சாம்பியன் தான் இருந்தாலும் இவங்க மட்டும் போதும்…கோல்கத்தா அணி எடுத்த முடிவு…

ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…

3 weeks ago