இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் முடிந்து விட்ட நிலையில், இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளார். தனக்கு பிடித்த லம்போர்கினி காரில் வலம் வரும் ரோகித் சர்மா வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. ரோகித் சர்மா லம்போர்கினியில் வலம் வருவது மும்பை வாசிகளுக்கு புதிதல்ல. எனினும், இந்த முறை அவரது கார் நம்பர் பலருக்கும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வரும் வீடியோவில், இந்திய கேப்டன் ரோகித் சர்மா தனது நீல நிற லம்போர்கினி காரில் வலம் வரும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. ரசிகர்கள் தன்னை வீடியோ எடுப்பதை உணர்ந்த கேப்டன் ரோகித் சர்மா அவர்களை கடக்கும் போது, காரில் இருந்தபடி வெற்றிக் குறி செய்கையை காண்பித்தப்படி கடந்து செல்கிறார். இந்த வீடியோவில் ரோகித் சர்மாவின் லம்போர்கினி கார் பதிவு எண் 0264 என்று இடம்பெற்று இருக்கிறது.
கடந்த 2014 ஆம் ஆண்டு ரோகித் சர்மா இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 264 ரன்களை விளாசினார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இதுவரை எந்த வீரரும் இந்த ரன்களை கடக்கவில்லை. அந்த வகையில், ஒருநாள் போட்டிகளில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக 264 இருக்கிறது. இதை குறிக்கும் வகையில் தான் ரோகித் சர்மா தனது காரின் பதிவு எண்ணை அப்படி வாங்கியுள்ளார் என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் குறிப்பிட்டுள்ளனர்.
ஐசிசி-யின் ஒருநாள் வீரர்கள் பட்டியலில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா இரண்டாவது இடத்தில் உள்ளார். முதலிடத்தில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் இடம்பிடித்துள்ளார். சமீபத்திய இலங்கை தொடரில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா மூன்று போட்டிகளில் 157 ரன்களை எடுத்தார். இந்த தொடரில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இது ஆகும். இதில் இரண்டு அரைசதங்கள் அடங்கும்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…