இந்திய கேப்டன் ரோகித் சர்மா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக சமீபத்தில் அறிவித்தார். டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா, இறுதிப் போட்டி முடிந்த சில மணி நேரங்களில் டி20 கிரிக்கெட்-இல் ஓய்வை அறிவித்தார். உலகக் கோப்பை தொடரை தொடர்ந்து இந்திய கேப்டன் ரோகித் சர்மா பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.
சில நாட்களுக்கு முன் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியை கண்டுகளித்தார். இதைத் தொடர்ந்து டள்ளாஸ்-இல் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரோகித் சர்மா கலந்து கொண்டார். அப்போது ஓய்வு பற்றிய கேள்விக்கு பதில் அளித்த ரோகித் சர்மா, தொடர்ந்து கிரிக்கெட் விளையாட இருப்பதாக தெரிவித்தார்.
இது குறித்து பேசிய ரோகித் சர்மா, சமீபத்தில் தான் தெரிவித்தேன். நான் எதிர்காலம் பற்றி அதிகம் யோசிக்க மாட்டேன். இதனால் இன்னும் சில காலம் நிச்சயம் விளையாடுவேன், என்று தெரிவித்துள்ளார்.
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 159 போட்டிகளில் விளையாடி இருக்கும் ரோகித் சர்மா, 4231 ரன்களை விளாசியுள்ளார். மேலும், இந்த வகை கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த வீரர் பட்டியலில் ரோகித் சர்மா முதலிடத்தில் உள்ளார். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ரோகித் சர்மா ஐந்து சதங்களை விளாசியுள்ளார். இதோடு 2007 மற்றும் 2024 என இரண்டு டி20 உலகக் கோப்பைகளை வென்றுள்ளார்.
சமீபத்தில் நடைபெற்று முடிந்த டி20 உலகக் கோப்பை தொடரோடு சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய அணியின் நட்சத்திர வீரரும், முன்னாள் கேப்டனுமான விராட் கோலி அறிவித்தார். இந்திய அணி உலகக் கோப்பை வென்றதும் விராட் கோலி இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…