டி20 உலகக் கோப்பை தொடரில் அபார வெற்றி பெற்ற கையோடு இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா அமெரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தார். சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய ரோகித் சர்மாவை விமான நிலையத்தில் ரசிகர்கள் சூழ்ந்து கொண்ட சம்பவம் அரங்கேறியது.
குடும்பத்தாருடன் விமான நிலையம் வந்த ரோகித் சர்மாவை வரவேற்க ஏராளமான ரசிகர்கள் கூடி இருந்தனர். அவர்கள் ரோகித் சர்மாவை பார்த்ததும் ஆரவாரம் செய்து, அவரை வரவேற்று மகிழ்ந்தனர். பலர், அவரை புகைப்படம் எடுக்க முயற்சித்தனர். சிலர் அவருடன் எப்படியாவது புகைப்படம் எடுத்திட வேண்டும் என்று அவரிடம், ஒரேயொரு செல்பி எடுக்கலாமா என்று கேட்டனர்.
தனது மனைவி ரித்திகா சஜெத், மகள் சமைரா ஆகியோருடன் விமான நிலையம் வந்த ரோகித் சர்மா, காரில் ஏற முற்படும் போது ரசிகர்கள் அவரை சூழ்ந்து கொண்டு செல்பி எடுக்க முற்பட்டனர். அவர்களை விரட்ட மனமின்றி சிலருடன் செல்பி எடுத்துக் கொண்ட ரோகித் சர்மா, சில நிமிடங்களில் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.
டி20 உலகக் கோப்பையை வென்ற கையோடு, சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோகித் சர்மா அறிவித்தார். எனினும், ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவதை அவர் உறுதிப்படுத்தினார்.
இதனிடையே இலங்கை அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் ஒருநாள் தொடரில் ரோகித் சர்மா இந்திய அணிக்கு தலைமை தாங்குகிறார். மேலும், அடுத்த ஆண்டு நடைபெறும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரிலும் ரோகித் சர்மா இந்திய அணியின் கேப்டனாக தொடர்வார் என்று தேர்வுக்குழு மற்றும் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் உறுதிப்படுத்தி உள்ளனர்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…