இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தனகக்கு பக்கபலமாக செயல்பட்ட மூன்று பேருக்கு நன்றி தெரிவித்தார். இந்த மூவர் பட்டியலில் சமீபத்திய டி20 உலகக் கோப்பை தொடரின் வெற்றிக்கு முக்கிய காரணமாக செயல்பட்ட ஜஸ்பிரித் பும்ரா, விராட் கோலி மற்றும் ஹர்திக் பாண்டியா என யாரும் இடம்பெறவில்லை.
மாறாக இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், இந்திய அணி தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்கர் மற்றும் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா ஆகியோர் ரோகித் சர்மாவுக்கு பக்கபலமாக இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார். இவர்களது ஒத்துழைப்பு இருந்ததால் தான், போட்டி முடிவுகள் பற்றி கவலையின்றி வீரர்களின் முழு திறமையை வெளிப்படுத்த செய்ய முடிந்தது என ரோகித் சர்மா தெரிவித்தார்.
“புள்ளி விவரங்கள், போட்டி முடிவுகள் பற்றி கவலை இன்றி அணியை மாற்றுவது எனது கனவாக இருந்தது. இப்படி ஒரு சூழலை உருவாக்கும் போது, வீரர்கள் முழு சுதந்திரத்தோடு களத்தில் அதிகம் யோசிக்காமல் விளையாடுவார்கள். இது தான் அவசியம் தேவையான ஒன்று. அந்த வகையில் எனக்கு திரு. ஜெய் ஷா, திரு ராகுல் டிராவிட் மற்றும் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்கர் என மூவரும் பக்கபலமாக இருந்தனர்.”
“நான் செய்ய விரும்பியதை செய்வது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று ஆகும். இந்த விஷயத்தில் வீரர்களை மறந்துவிட முடியாது. அவர்கள் தான் இக்கட்டான சூழ்நிலைகளில் அணிக்கு தேவையான முடிவுகள் கிடைப்பதை உறுதிப்படுத்தினர்.”
“இந்த உணர்வுகள் தினமும் கிடைத்துவிடாது. நாங்கள் உண்மையில் நம்பிக் கொண்டிருந்த விஷயம் அது. நாங்கள் உலகக் கோப்பையை வெல்லும் போது, அந்த தருணத்தை முழுமையாக கொண்டாடுவது எங்களுக்கு முக்கியமாக இருந்தது. இதோடு ஒட்டுமொத்த தேசமும் எங்களுடன் கொண்டாடுவது, நாங்கள் அவர்களுக்கு நன்றி தெரிவிப்பது முக்கியம் ஆகும்,” என்று ரோகித் சர்மா தெரிவித்தார்.
சியட் கிரிக்கெட் ரேட்டிங் விருது வழங்கும் விழாவில், ஆண்கள் கிரிக்கெட்டில் ஆண்டின் தலைசிறந்த வீரராக ரோகித் சர்மா தேர்வு செய்யப்பட்டார். இதற்கான விருது வழங்கும் விழாவில் தான் ரோகித் சர்மா இவ்வாறு பேசினார்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…