இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய வீரர்கள், ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. யாரும் எதிர்பாராத வகையில், இந்திய அணி 27 ஆண்டுகளுக்கு பின் இலங்கையிடம் ஒருநாள் கிரிக்கெட் தொடரை இழந்தது. இதைத் தொடர்ந்து இந்திய வீரர்கள் உள்ளூர் கிரிக்கெட் தொடருக்கு ஆயத்தமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் ரெட்-பால் கிரிக்கெட்டின் முக்கியத்துவம் குறித்து பலமுறை கருத்து தெரிவித்துள்ளார். அந்த வகையில், அவர் இதே விஷயத்தை தேசிய அணி வீரர்களிடமும் புகுத்த முயற்சிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து வெளியான தகவல்களில் சுப்மன் கில், கேஎல் ராகுல், ரவீந்திர ஜடேஜா மற்றும் ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற மூத்த வீரர்களையும் துலீப் கோப்பை தொடரில் விளையாட வைக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான சுப்மன் கில், கேஎல் ராகுல், அக்சர் பட்டேல், ரவீந்திர ஜடேஜா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், சூர்யகுமார் யாதவ், குல்தீப் யாதவ் ஆகியோர் துலீப் கோப்பை தொடரில் விளையாட கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த பட்டியலில் விடுபட்டுள்ள ஒரே வீரர் ஜஸ்பிரித் பும்ரா மட்டும்தான்.
துலீப் கோப்பை தொடருக்கான வீரர்களை பிசிசிஐ தேர்வு செய்யும் என்பதால், இந்த பட்டியலில் ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற வீரர்களின் பெயர் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதில் இஷான் கிஷன் பெயரும் இடம்பெற வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த பட்டியலில் முன்னாள் வீரர்களான அஜிங்கியா ரகானே மற்றும் சத்தேஷ்வர் புஜாரா ஆகியோருக்கு இடம் கிடைப்பது சந்தேகம் தான்.
இந்திய அணி அடுத்ததாக வங்காளதேசம் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இந்த தொடர் செப்டம்பர் 19 ஆம் தேதி துவங்கும் என்று கூறப்படுகிறது. துலீப் கோப்பை கிரிக்கெட் செப்டம்பர் 5 ஆம் தேதி துவங்குகிறது. அடுத்த நான்கு மாதங்களுக்குள் இந்திய அணி மொத்தம் பத்து டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது. இதில் ஐந்து போட்டிகள் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரானவை ஆகும்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…